பொதுவாக, உலகிலேயே அதிகபட்சமாக குளிப்பவர்களில் இந்திய மக்கள்தான் அதிகமாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது. மத நம்பிக்கைகள் காரணமாக, இந்தியர்கள் தினமும் குளிக்கிறார்கள். ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம் தங்களின் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமின்றி, உடலை சுத்தப்படுத்துவதாகவும் உணர்கிறார்கள். இதை இந்தியாவில் பின்பற்றுவது மட்டுமன்றி மற்ற நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த வழியை பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தினசரி வழிபாட்டிற்கு குளிப்பது அவசியம் என்று நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் சொல்வது வேறு.
நீங்கள் தினமும் குளித்தால், உங்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது என்று அறிவியல் நம்புகிறது. உலகெங்கிலும் உள்ள தோல் நிபுணர்கள் நீங்கள் குளிர் காலத்தில் தினமும் குளிக்கவில்லை என்றால், ஆரோக்கியம் பாதிக்காது என்கிறார்கள். அதிகமாக குளிப்பது நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். சொல்லப்போனால், அனைவரும் கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு 2 முறை குளிக்க விரும்புகிறார்கள். ஆனால் குளிர்காலத்தில் குளிப்பதே ஒரு சவால்தான். ஆனாலும் அதை தவிர்க்காமல் செய்துவிடுவார்கள்.
வெந்நீரில் குளிப்பதும் தீங்கு விளைவிக்கும் : குளிர்காலத்தில் வெந்நீரில் நீண்ட நேரம் குளித்தால், அதனால் ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் சருமம் வறண்டு போகும். இது உடலின் சுரக்கும் இயற்கையான எண்ணெய்யை நீக்குகிறது. உடலின் இந்த இயற்கை எண்ணெய் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. அறிவியலின் படி, இந்த எண்ணெய் உங்களை ஈரப்பதமாகவும் காற்று மூலம் பரவு நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (வாஷிங்டன் டி.சி., யு.எஸ்.) உதவிப் பேராசிரியர் டாக்டர் சி. பிராண்டன் மிட்செல் கூறுகையில், ”குளித்தால் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் வெளியேறி, நல்ல பாக்டீரியாவையும் நீக்குகிறது. இந்த பாக்டீரியா நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது. அதனால்தான் குளிர்காலத்தில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கன் யுனிவர்சிட்டியின் மரபியல் அறிவியல் மையத்தின் ஆய்வின்படி, யூட்டா பல்கலைக்கழகம், “அதிகமாக குளிப்பது நமது மனித உடலின் பாதுகாப்பு அமைப்பை பாதிக்கிறது. கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடும் திறன் பலவீனமடைகிறது. உணவை ஜீரணிக்கும் திறன் மற்றும் அதிலிருந்து வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை பிரிக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.
நகங்களும் சேதமடைகின்றன : தினமும் வெந்நீரில் குளிப்பதும் உங்கள் நகங்களை சேதப்படுத்தும். குளிக்கும்போது நகங்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும். பின்னர் அவை மென்மையாகி உடைந்துவிடும். இது இயற்கை எண்ணெயையும் நீக்குகிறது, இதன் காரணமாக அவை உலர்ந்து பலவீனமாகின்றன.குளிக்கும் போது நகங்கள் தண்ணீரை உறிஞ்சி, அவற்றின் இயற்கையான பிரகாசம் மற்றும் மென்மைத்தன்மையை குறைக்கலாம். இதன் காரணமாக, நகங்களின் ஆணி உலர்த்து போதல் மற்றும் பலவீனமடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
குளியல் பல அம்சங்களை தீர்மானிக்கிறது : குளிக்கும் பழக்கம் ஒரு நபரின் மனநிலை, வெப்பநிலை, தட்பவெப்பநிலை, பாலினம் மற்றும் சமூக அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்தது. இந்தியாவில் மதக் காரணங்களைத் தவிர, தண்ணீர் கிடைப்பதும் ஒரு பெரிய காரணம். ஆனால் இந்தியாவில் பல நேரங்களில் குளிப்பதற்கு காரணம் வெறும் சமூக அழுத்தம் தான் என்பதும் உண்மை.
குளிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குளிப்பதில் உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா மக்கள் மிகவும் முன்னேறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பல ஆராய்ச்சிகளில், தினமும் குளிப்பது தண்ணீரை வீணாக்குவது மட்டுமல்ல, அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதுவாயினும் அவை அமெரிக்கா போன்ற மேலை நாட்டவர்களுக்கு ஒத்துவரும் என்றாலும் இந்தியர்களுக்கு அது சாத்தியமா என்பது சந்தேகமே. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு பேட்டியளித்த தோல் நோய் மருத்துவர் யசோதரா ஷர்மா “ உடல் சுத்தத்திற்காக தினமும் குளிப்பது அவசியம் என்கிறார். உடலின் இறந்த செல்களை நீக்கவும், நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கவும், உடல் புத்துணர்ச்சிக்காகவும் தினமும் குளிப்பது அவசியம். தனி மனித சுகாதாரத்தில் தினசரி குளியல் என்பதை உறுதி செய்வது அவசியம். அதேசமயம் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பதுதான் தவறு என்கிறார்.