கைக்கழுவுவதும், சானிடைசர் பயன்படுத்துவதும் மக்களின் புதிய பழக்கமாக மாறிவிட்டது. தற்போது அதை அவர்களுக்கே தெரியாமல் அடிக்கடி செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இப்படி அடிக்கடி தொடர்ச்சியாக செய்வதால் அதிகபட்சமாக மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கைகளில் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்படுவதாக இந்திய ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வு அடிக்கடி சோப்பு போட்டு கைக்கழுவுவதும், சானிடைசர் அதிகம் பயன்படுத்தும் சாதாரண பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அதன் தாக்கம் தோல்களில் எப்படி உள்ளது என்பதை கண்டறிய உதவியது. இதனால் இந்த ஆய்வு கை சுகாதாரத்தை பாதுகாக்க வேறெந்த மாற்றங்களைக் கொண்டு வரலாம். நீரிழப்பை தக்க வைக்க உதவும் தோலின் திறனையும் கண்டறியவும் உதவியாக இருந்தது என்று மோனிஷா மதுமிதா கூறியுள்ளார்.