உலக அளவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது ஒருசில வாரங்களாக புது வகை கொரோனா பரவி வருகிறது. ஓமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வகை கொரோனா வைரஸ் தான் தற்போது எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வளம் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைவாக இருப்பதால் சற்று ஆசுவாசப்பட்டார்கள். தற்போது மீண்டும் இந்த புது வகை ஓமைக்ரான் கொரோனா பரவுவதால் உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
தடுப்பூசி போட்டவர்கள் : புதிய வகை கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள என்னென்ன வழிகள் உள்ளது என்று மக்கள் தேடி வருகின்றனர். தடுப்பூசி போட்டவர்களையும் இது சிறிய அளவில் பாதிக்கும் என்று இதுவரை வந்த தரவுகளின்படி அறியப்பட்டுள்ளது. எனினும் வரும் நாட்களில் இதன் வீரியம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் புது புது வகை கொரோனா வைரஸ் தோன்றினாலும் அவற்றை சமாளிக்கும் அளவிற்கு நாம் தயாராக வேண்டும்.
பாதுகாப்பு : கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் புதிய வகை ஓமைக்ரான் பாதிப்பு ஏற்படவும் கூடும். இவற்றின் இருந்து நம்மை பாதுகாக்க ஒரே வழி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தான். குறிப்பாக முன்னதாகவே சில நோய்கள் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் உடனடியாக 2 தவணை தடுப்புசிகளையும் போட்டு கொள்ள வேண்டும்.
மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி : தடுப்பூசி போட்டு கொண்டாலும் ஓமைக்ரான் வைரஸால் சில பாதிப்புகள் ஏற்பட கூடும். எனவே இதற்கான தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை செய்தாக வேண்டும். மேலும் அவசியம் இல்லாதபோது வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பூஸ்டர் ஊசிகள் : எதிர்ப்பு சக்தியை மேலும் பலப்படுத்த கொரோனா பூஸ்டர் மருந்துகள் உதவுகின்றன. Pfizer-BioNTech மற்றும் Moderna ஆகிற நிறுவனங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளன. இவை ஓமைக்ரான் கொரோனாவை எதிர்த்து செயல்பட வழி செய்யும். அமெரிக்காவில் இந்த வகை பூஸ்டர் ஊசிகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் இதை பற்றிய தெளிவான அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.