ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

குறிப்பாக இந்த ஆய்வின் படி, 70 அல்லது 80 வயதானவர்களுக்கு மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் சில மாற்றங்கள் அல்லது நினைவாற்றல் இழப்பு ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் 16 வயதுடைய ஒருவரின் மூளை முன்கூட்டியே வயதாகிவிட்டால் நிலை என்னவாகும்? என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என்கின்றது ஆய்வு.

 • 17

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. முதல் அலை, இரண்டாம் அலை என தொற்றின் தாக்கம் அதிகரித்து பல்வேறு மனித உயிர்களையும் காவு வாங்கியது. இதோடு கொரோனா தொற்றினால், நுரையீரல் தொற்றில் ஆரம்பித்து சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி மூச்சுவிடுவதற்கும் சிரமம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் இந்நோய்தொற்று ற மூளையையும் நேரடியாகத் தாக்கலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

  MORE
  GALLERIES

 • 27

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  ஆம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவுகளும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைகிறது. குறிப்பாக அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் கொரோனா தொற்றின் காரணமாக பெரியவர்களுக்கு ஏற்படும் கவலை மற்றும் மனச்சோர்வு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 25 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 37

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  இதோடு நண்பர்களுடன் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது மற்றும் எதிர்கால நிலை என்னவாகும்? என்பது குறித்த யோசனைகள் இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதித்துள்ளது எனவும் சில ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதோடு கொரோனா தொற்று பதின்ம வயது அதாவது டீனேஜ் வயதினரின் மூளையிலும் பல மாற்றங்களையும் ஏற்படுத்துகிறாம். பொதுவாக பருவமடைதல் மற்றும் டீன் ஏஜ் பருவத்தில், குழந்தைகளின் உடல்கள் ஹிப்போகாம்பஸ் மற்றும் அமிக்டாலா ஆகிய இரண்டிலும் அதிகரித்த வளர்ச்சியை அனுபவிக்கின்றன, அவை முறையே சில நினைவுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் உணர்ச்சிகளை மாற்றியும் அமைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 47

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  டீனேஜ் வயதினரின் மூளைக் குறித்த ஆய்வுகள்…
  தொற்றுநோய்க்கு முன்னும் பின்னும் சுமார் 163 குழந்தைகளிடம் எம்ஆர்ஐ ஸ்கோன் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் இளம் பருவத்தினரின் மூளையின் செயல்திறனை விரைவுப்படுத்துவதைக் காட்டுவதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்டான்ஃபோர்ட் நரம்பியல் வளர்ச்சி, பாதிப்பு மற்றும் மனநோயியல் (SNAP) ஆய்வகத்தின் இயக்குனராக இருக்கும் கோட்லிப் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  இளம் வயதினரின் மூளையில் அளவுக்கு அதிகமாக விரைவான மாற்றங்கள் ஏற்படும் போது, வன்முறை, குடும்பத்தின் நாட்டம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களினால் பல்வேறு விதமான துன்பத்தை அனுபவித்தது தெரியவந்துள்ளது. இது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் மோசமான மனநிலை விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதே சமயம் ஆய்வின் போது, ஸ்டான்போர்ட் குழு ஆராய்ந்ததில், மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மனநலத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  குறிப்பாக இந்த ஆய்வின் படி, 70 அல்லது 80 வயதானவர்களுக்கு மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் சில மாற்றங்கள் அல்லது நினைவாற்றல் இழப்பு ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் 16 வயதுடைய ஒருவரின் மூளை முன்கூட்டியே வயதாகிவிட்டால் நிலை என்னவாகும்? என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை என்கின்றது ஆய்வு. மேலும் தொற்றுநோயை அனுபவித்த குழந்தைகள் தங்கள் மூளையில் விரைவான வளர்ச்சியைக் காட்டினால், இந்த தலைமுறையை உள்ளடக்கிய எந்தவொரு எதிர்கால ஆராய்ச்சிலும் விஞ்ஞானிகள் மேற்கொள்ளலாம் எனவும், அந்த அசாதாரண வளர்ச்சி வகிதத்தைக் கணக்கிட வேண்டும் என்கிறது ஆய்வுகள்.

  MORE
  GALLERIES

 • 77

  கொரோனா தொற்று டீனேஜ் வயதினரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா..?

  பொதுவாக இளமைப் பருவம் என்பது ஏற்கனவே மூளையில் விரைவான மறுசீரமைப்பின் காலமாகும். இந்நிலையில் அவர்களிடம் அதிகரிக்கும் மனநலப் பிரச்சனைகள், மனச்சோர்வு போன்றவை அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் தான், பதின்ம வயதினரின் மன ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் விஞ்ஞானி கோட்லிப் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES