2020-ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் பெரும் அச்சத்தையும், கவலையையும் கொடுத்த ஆண்டாகவே உள்ளது. ஏதேனும் ஒரு விஷயங்களை மேற்கொள்ள நினைத்தால் கூட ஒரு பெரிய தடை போல வைரஸ் தொற்று பாதிப்பு நம்மை வாட்டிவதைத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை சந்தித்திருந்தாலும், இந்த உலகளாவிய தொற்றுநோயினால் ஏற்பட்ட ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மக்களிடம் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததுதான்.
இதற்கு ஊரடங்கு ஒரு பெரிய உதவியாக இருந்தது என்று சொல்லலாம். ஊரடங்கு சமயத்தில் நம்மில் பெரும்பாலானோர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். சிலர் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். இருப்பினும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை நாம் இதுபோன்ற விளைவுகளை சந்திப்போம் என்று சிறிதளவு கூட நினைத்து பார்க்கவில்லை. ஆரம்பகாலத்தில் நாவல் கொரோனா வைரஸ் (COVID19) பற்றி வெளியான சில உண்மை விஷயங்கள் மற்றும் வதந்திகள் குறித்து பார்ப்போம்.
1. அறிகுறிகள் பெரும்பாலும் சுவாச சம்பந்தப்பட்டவை: கொரோனா வைரஸ் தொற்றுக்கு காய்ச்சல் மற்றும் சோர்வு மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக இருந்தாலும், இருமல், பெருமூச்சு போன்றவையும் சில அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன. நிலைமை மோசமடைந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பு, நிமோனியா மற்றும் கடுமையான சுவாச நோய்க்குறி ஆகியவற்றால் பாதிக்கப்படலாம். இது ஒரு நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கும்.
2. அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்பு: ஆரம்பகாலத்தில் வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தாலும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை. ஒரு சிலர் மிகவும் லேசான வைரஸ் அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
3. சூடான பானங்கள் மக்களுக்கு ஆற்றலை தருவதாக கிளம்பிய புரளி: கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் சூடான பானங்கள் குடிப்பதால் அது உடலில் உள்ள வைரஸைக் கொல்லும் என்ற சில கட்டுக்கதைகள் மக்களிடையே உலாவி வந்தன. இருப்பினும், இது உண்மையாக இருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே, சூடான திரவங்களை குடிப்பதால் ஒரு நபர் வலிமையான ஆற்றலை பெற முடியாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
5. அதிக வெப்பநிலையில் வைரஸ் பரவாது என கிளம்பிய புரளி: இந்தியாவில் பெரும்பாலும் வெப்பநிலை அதிகம் தான். அந்த வகையில் கொரோனா பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் பரவிய போது, வைரஸ் குளிர்பிரதேசங்களில் அதிகமாக பரவும் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் பரவாது என்று ஒரு புரளி வெளிவந்தது. பின்னர், வெப்பநிலை வைரஸைக் கொல்வது குறித்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஏனெனில் கொரோனவால் 25 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பமான சூழ்நிலைகளில் உயிர்வாழ முடியும்.
6. முகக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டது: மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் முகக்கவசங்களின் செயல்திறனைப் பற்றி பல ஆண்டுகளாகப் பேசி வருகின்றனர். இருப்பினும் தொற்றுநோய் காலத்தில் இந்த முகக்கவசங்கள் அத்தியாவசிய பொருளாகவே மாறியுள்ளது. முகக்கவசங்கள் மாசுபாட்டினால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
10. வைரஸால் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருவரும் பாதிக்கப்படக் கூடியவர்கள்: மீட்பு விகிதத்தில் உள்ள மாறுபாடு காரணமாக, இளைஞர்களிடையே வைரஸின் தீவிரம் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்ட வயதானவர்களை விட இளைஞர்கள் படிப்படியாக குணமடைந்து வருகின்றனர். இருப்பினும், இளைஞர்கள் வயதானவர்களைப் போலவே அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.