ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னும் பின்னும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில வலி நிவாரணிகள் நோயெதிர்ப்பு சக்தியை மழுங்கச் செய்யலாம் என்பதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். எனவே இந்த கட்டத்தில், நீங்கள் தடுப்பூசி பெற்ற பிறகு உடனடியாக வலி நிவாரணி மருந்தை உட்கொள்வது நல்லது அல்ல.

 • 113

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  கடந்த மே 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் பலர் தங்களது 2வது டோஸ் ஊசியை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனவால் உலக நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக தடுப்பூசிகள் இருந்தன. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக மக்கள் மேலும் கவலையடைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 213

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  இருப்பினும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு முதல் அலையை விட அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும். இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் உடல்வலி போன்ற பக்கவிளைவுகளை எதிர்கொள்ள வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும் வலி நிவாரணிகளை எடுக்காமலேயே இயற்கை வழியில் பக்க விளைவுகளை சரிசெய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 313

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  தடுப்பூசி பக்க விளைவுகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம்? : வழக்கமாக, ஒப்புதலின் கீழ் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் ரியாகோஜெனிக் வகை ஆகும். இது லேசான காய்ச்சல், குமட்டல், குளிர், உடல்நலக்குறைவு, உடல் வலி போன்ற சில பக்க விளைவுகளைத் தருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 'கோவிட் ஆர்ம்' என்று கூறப்படும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதாவது ஊசி போடும் இடத்தில் வலி மற்றும் விறைப்பு போன்றவை வரலாம். இந்த பக்க விளைவுகள் இயல்பானவைதான். இவை 48 மணி நேரம் வரை நீடிக்கும். இருப்பினும், அவை சற்று அசவுகரியமாகவும் விரும்பத்தகாததாகவும் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 413

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  இதனை சரிசெய்ய வலி நிவாரணியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது அனைவரின் விருப்பமான தேர்வாக இருக்காது. ஏனெனில் சில மருந்துகள் முரணாக செயல்படலாம். வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துவது தடுப்பூசியின் செயல்திறனை குறைக்கலாம் அல்லது கடுமையான பக்க விளைவுகளைத் தூண்டலாம் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்களும் இதுவரை இல்லை. இருப்பினும், எந்தவொரு வலி நிவாரணி மருந்தின் கண்மூடித்தனமான பயன்பாடும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 513

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னும் பின்னும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில வலி நிவாரணிகள் நோயெதிர்ப்பு சக்தியை மழுங்கச் செய்யலாம் என்பதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். எனவே இந்த கட்டத்தில், நீங்கள் தடுப்பூசி பெற்ற பிறகு உடனடியாக வலி நிவாரணி மருந்தை உட்கொள்வது நல்லது அல்ல. எனவே தடுப்பூசி பெற்ற பிறகு ஏற்படும் பக்க விளைவுகளின் அசவுகரியத்தையும் தீவிரத்தையும் குறைக்க சில நிபுணர் அங்கீகாரம் பெற்ற வழிகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து காண்போம்.

  MORE
  GALLERIES

 • 613

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  காய்ச்சலைப் போக்க ஐஸ் பேக்ஸை (cold compress) பயன்படுத்துங்கள் : தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் லேசான காய்ச்சல், பொதுவான பக்க விளைவுகளில் ஒன்றாகும். ஒரு டோஸ் போட்ட சில மணிநேரங்களுக்கு லேசான காய்ச்சலை உணருவது முற்றிலும் இயல்பானது. இருப்பினும், உங்கள் காய்ச்சலைக் குறைக்க நீங்கள் மருந்து அல்லாத வழிகளைத் தேடுகிறீர்களானால், ஒரு துணி அல்லது ஐஸ் பேக்கை பயன்படுத்தலாம். இது வெப்பநிலையை குறைத்து காய்ச்சலை நன்கு நிர்வகிக்கும். இதே வைத்தியத்தை குளிர் மற்றும் தலைவலியை சமாளிக்க முயற்சி செய்யலாம். இதுதவிர, உங்கள் காய்ச்சலின் தீவிரத்தை குறைப்பதற்கும், நன்கு குணமடைவதற்கும் போதுமான ஓய்வு எடுப்பதை உறுதி செய்வது முக்கியம்.

  MORE
  GALLERIES

 • 713

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  நன்கு சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதும் அவசியம்: ஒவ்வொரு டோஸ் எடுத்துக்கொள்ளும் போதும் வீக்கம் ஏற்படலாம். இதனால் உங்கள் உடல் அதிக சோர்வை உணரும். உடல்நலக்குறைவு மற்றும் மந்தநிலையை எதிர்கொள்வீர்கள். இந்த பக்க விளைவுகளை எதிர்ப்பதற்கான சிறந்த வழி, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை நடுநிலைப்படுத்துவதும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்துவதும் தான்.

  MORE
  GALLERIES

 • 813

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  தடுப்பூசி போடுவதற்கு முந்தைய நாள் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகளை குறைக்க நல்ல தூக்கத்தைப் பெறுவது அவசியம். மேலும் நன்றாக சாப்பிடுவதால், ஊசி பெறுவதற்கு முன்னும் பின்னும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளாமலேயே உங்களது சோர்வை வெல்லலாம். அதேபோல உங்கள் நாவின் மேற்பரப்பு வெண்மையாகத் தோன்றும் போது உங்களுக்கு அதிக நீர் தேவை என்பதைக் குறிக்கிறது. தண்ணீர் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறுகள், ORS உப்புகள் மற்றும் ஊட்டமளிக்கும் திரவங்களை குடிப்பது அறிகுறிகளையும் பக்க விளைவுகளையும் நன்கு நிர்வகிக்கும்.

  MORE
  GALLERIES

 • 913

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  உங்கள் 'கோவிட் ஆர்ம்'-க்கு அசைவு கொடுங்கள்: கொரோனா தடுப்பூசி கையில் விறைப்புத்தன்மையை உருவாக்குகிறது. இதனால் தடுப்பூசி பெற்றவருக்கு தனது கையை நகர்த்துவது கடினம். இந்த பக்க விளைவைச் சமாளிக்க ஒரு வழி இருக்கிறது. இது மிகவும் கடுமையாகவும் மற்றும் சங்கடமானதாகவும் இருக்கும். ஆனால் இதனை செய்வதால் நல்ல தீர்வு கிடைக்கும். கைகளை லேசாக நகர்த்துவது, நீட்டி மடக்குவது போன்ற சில மென்மையான பயிற்சிகளை செய்யலாம். அதேபோல, ஊசி போட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஆனால் ஒரு போதும் அந்த இடத்தை தேய்த்து விடாதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 1013

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  வெந்நீர் குளியல், எப்சம் உப்பு நீராவி: தடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் தசை வலி, பலவீனம் மற்றும் உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டீர்கள் என்றால் வெந்நீர் குளியல் உதவக்கூடும். தடுப்பூசி டோஸ் கையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் போது நோயெதிர்ப்பு எதிர்விளைவு காரணமாக புண் மற்றும் வலி ஏற்படுகிறது. ஆனால் சூடான நீர் வீக்கத்தைத் தணிக்கும் மற்றும் வலியைக் குறைக்கும். எப்சம் உப்பு அடிப்படையிலான வீட்டு வைத்தியங்களும் உதவக்கூடும்.

  MORE
  GALLERIES

 • 1113

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  குமட்டலை சமாளிக்க மசாலா பொருள்களைத் சாப்பிடுதல்: தடுப்பூசி பெற்ற மக்கள் குறிப்பாக பெண்கள் காய்ச்சலுடன் குமட்டல் போன்ற பக்க விளைவுகளை பெறலாம். நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் உணவை மாற்றியமைப்பதன் மூலமோ அல்லது சில இயற்கை மசாலாப் பொருட்கள் மூலமோ குமட்டலை திறம்பட கட்டுப்படுத்தலாம். இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு ஆகியவை கலந்த கஷாயத்தை பருகலாம். மேலும், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவை நீங்கள் சாப்பிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இது குமட்டல் மற்றும் வயிற்றுப் பிடிப்பை மோசமாக்கும்.

  MORE
  GALLERIES

 • 1213

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  தடுப்பூசிக்குப் பிறகு நீங்கள் உடற்பயிற்சி செய்யலாமா : உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு உடலுக்கு நல்லது என்றும், அடிப்படையில், நோயெதிர்ப்பு சக்தியை அதிக அளவில் மேம்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி போட்ட பின்னர் அவ்வாறு செய்வது நல்லது என்றாலும், உடனடியாக செய்ய நிர்பந்திக்க வேண்டாம். எப்படி கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, நல்ல உயிர்வாழும் நோயெதிர்ப்பு சக்தியை பெற உங்கள் உடலுக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறதோ, தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் ஓய்வு அவசியம். தடுப்பூசி போடும் நாளில் அதிகமாக உழைப்பது அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது நல்லது அல்ல. உங்களுக்கான ஓய்வு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1313

  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வரும் பக்க விளைவுகளை வலிநிவாரணி இல்லாமல் எப்படி சரி செய்யலாம்!

  இரண்டாவது டோஸுக்குப் பிறகும் பக்க விளைவுகள் கடுமையானதாக இருப்பதால், மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். மேலும் இவை உங்களை இயல்பு நிலைக்கு திரும்ப உதவும். எனவே பக்கவிளைவுகளுக்கு பயப்பட வேண்டாம். தடுப்பூசி பெற்ற 4 நாட்களுக்கு பிறகும் பக்க விளைவுகள் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.

  MORE
  GALLERIES