கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தற்போது இந்தியா மிகவும் கடினமான தருணத்தில் உள்ளது. பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையிலும் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்புகள் கிட்டத்தட்ட 3 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பது யாராலும் உறுதியாக கூற முடியாத சூழல் உள்ளது. தொற்று மின்னல் வேகத்தில் பரவி நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், எதையும் எதிர்கொள்ள அனைவரும் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும்.
ஒரு நபர் அல்லது அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டோ அல்லது ஏற்கனவே வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் மன மற்றும் உடல் ரீதியாக தயாராக இருக்க வேண்டும். பெரும்பாலான மருத்துவமனைகள் அடிப்படை அத்தியாவசியங்களை வழங்கினாலும், தொற்றின் தீவிரத்தால் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் இந்த நேரத்திலும் நோயாளிகளின் தேவையை மருத்துவமனைகள் சரியாக பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் மருத்துவமனையில் தங்க நேரிடும் ஒருவர் மறவாமல் பேக் செய்து கொள்ள வேண்டிய பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
4) மருந்துகள் : ஒருவர் ஏற்கனவே நீரிழிவு நோய் அல்லது தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை எடுத்து செல்ல மறக்க கூடாது. COVID-19 தொடர்பான சிக்கல்களுக்கு ஒருவர் சிகிச்சை பெற்றாலும் கூட, எப்போதும் எடுத்து வரும் பொதுவான மருந்துகளை தவிர்க்கக்கூடாது. அப்படி செய்தால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
6) ஆக்ஸிமீட்டர் : கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகள் ஆபத்தான ஆக்ஸிஜன் அளவை கொண்டுள்ள காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் நாடு முழுவதும் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான துயர சம்பவங்கள் நடப்பதை பார்க்கிறோம். ஒரு சிறிய விரல் சாதனமான ஆக்ஸிமீட்டர், COVID-19 பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள ஒருவரது ஆக்சிஜன் அளவை கண்டறிந்து தக்க சமயத்தில் மருத்துவர்களிடம் உதவி கேட்க உதவும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருந்தாலும் ஆக்ஸிஜன் அளவை அடிக்கடி சோதித்து பார்த்து கொள்வது மூச்சு திணறல் உள்ளிட்ட அபாயங்களில் இருந்து காக்கும்.
9) புத்தகங்கள்: கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்கள் இன்றி தனிமையில் இருக்கும் போது நாட்டின் மோசமான நிலை குறித்து செய்திதாள் அல்லது மொபைலில் தெரிந்து கொள்வது மனஅமைதியை குலைக்கும். எனவே மருத்துவமனையில் அட்மிட் ஆகும் நிலா ஏற்பட்டால், சிறந்த புத்தகங்கள் அல்லது இதழ்களை தேர்வு செய்து பையில் எடுத்து வைத்து கொள்வது முக்கியமான ஒரு செயல்.