பொதுவான சளி மற்றும் COVID-19 சளி இரண்டும் மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கும் ஒரு வைரஸ் தொற்றாகும். ஒருவர் பேசும்போது, இருமல் அல்லது தும்மும்போது பாதிக்கப்பட்ட நபரின் மூக்கு மற்றும் வாயிலிருந்து வரும் சிறிய சுவாச துளிகள் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இருப்பினும், இரண்டு வகையான வைரஸ்களும் வேறுபட்டவை மற்றும் வெவ்வேறு அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தொற்று ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு அது COVID-19 ஆக உருமாறலாம். இதுதான் அந்த வைரஸின் ஆபத்தாக இருக்கிறது.
வறண்ட இருமல் என்பது கொரோனா வைரஸின் ஒரு அறிகுறியாகும், இது பெரும்பாலான நோயாளிகளுக்கு காணப்படுகிறது. COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 59 முதல் 82 சதவீதம் பேர் ஆரம்ப நாட்களில் வறண்ட இருமலை அனுபவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு-சீனா இணைந்து நடத்திய ஆய்வு 2020 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் COVID-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 68 சதவீதம் பேர் வறண்ட இருமலை அனுபவித்திருக்கிறனர். இது 55,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட பாசிடிவ் வழக்குகளின் அடிப்படையில் இரண்டாவது பொதுவான அறிகுறி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வறண்ட இருமலில் கபம் அல்லது சளி போன்ற எதுவும் வருவதில்லை. கபத்தை உற்பத்தி செய்வது ஈரமான இருமலின் அறிகுறியாகும். இது பொதுவாக ஒரு சாதாரண சளி மற்றும் காய்ச்சலுடன் தொடர்புடையது. இருப்பினும், வறண்ட இருமல் ஒரு ஒவ்வாமைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, உங்கள் மருத்துவரை அணுகுவது அல்லது உறுதிப்படுத்த COVID-19 பரிசோதனை செய்வது நல்லது.
வறண்ட மற்றும் தொடர்ச்சியான இருமலின் கலவை கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறியாகும். இந்த இருமலானது மிகவும் சத்தமான ஒலியை எழுப்புகிறது. இது உங்கள் தொண்டையின் பின்புறத்தில் தூண்டப்படுகிறது. மேலும் குரலின் ஒலியை மாற்றுகிறது. அது ஒரு கரடுமுரடான ஒலி அல்லது குரைப்பது போல் இருக்கும். இருமலுடன் காற்றுப்பாதைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் இதுபோன்ற அறிகுறிகள் வருகின்றன.
இருமல் மற்றும் காய்ச்சல் அதோடு மூச்சுத் திணறலும் சேர்ந்து கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை உறுதி செய்கின்ற அறிகுறியாக கருதப்படுகிறது. தொடர்ச்சியான வறண்ட இருமல் உங்கள் சுவாசக்குழாயில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளில் 40 சதவீதம் வரை ஆரம்ப நாட்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மூச்சுத் திணறல் நீண்ட COVID-19 இன் அறிகுறியாகும். நோய்த்தொற்றிலிருந்து மீண்டு சில வாரங்கள் கழித்தும்கூட பெரும்பாலான மக்கள் அதை அனுபவிக்கிறார்கள்.
தீவிரமற்ற பிரச்சினைகள் முதல் COVID-19 வரையிலான நோய்களால் தொண்டை புண் ஏற்படலாம். இருப்பினும், இது குறைவான அறிகுறியாகும். இது ஒருவ்வொருவருக்கும் மாறுபடலாம். COVID-19 வைரஸ், மூக்கு மற்றும் தொண்டையுடன் தொடர்புடைய சவ்வுகளுக்குள் நுழைகிறது. அவை உள்ளே சென்றதும் தீவிரமடையக்கூடும். இதனால் சிலருக்கு தொண்டை புண் ஏற்படுகிறது. நோயாளி உணரும் வலி மற்றும் வேதனையை 'ஃபரிங்கிடிஸ்' என்று அழைக்கிறார்கள். COVID-19 ஐப் பொறுத்தவரையில், காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் சோர்வு போன்ற தொண்டை வலி ஆகியவற்றுடன் பிற ஆதிக்கம் செலுத்தும் அறிகுறிகளையும் ஒருவர் அனுபவிக்கலாம், இது போன்ற அறிகுறிகளை நீங்களும் அனுபவித்தால் அது சாதாரண சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி இல்லை.
மூடியிருக்கும் மூக்கு சாதாரண சளி மற்றும் காய்ச்சலின் போது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதனுடன் நீங்கள் வாசனை இழப்பு (அனோஸ்மியா), குறைந்த வாசனை உணர்வு (ஹைபோஸ்மியா) அல்லது மாறுபட்ட வாசனையை அனுபவித்தால், உங்கள் இருமல் COVID-19 உடன் தொடர்புடையதாக இருக்கலாம். கொரோனா வைரஸ் பாசிடிவ் நோயாளிகளிடம் வாசனை இழப்பு அறிகுறியின் சராசரி பாதிப்பு சுமார் 41 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. இருமல் இல்லாத நிலையில் கூட, பெரும்பாலானவர்கள் வாசனை இழப்பை உணர்ந்துள்ளனர்.