கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அம்சங்கள் தினம் தினம் வழிமொழியப்படுகிறது. அந்த வகையில் ஆயுர்வேத முறையில் எப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என ஆயுர்வேத அமைச்சகம் சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அவை உங்களுக்காக...!
2/ 8
Chyawanprash என்னும் ஆயுர்வேத லேகியத்தை தினமும் காலை 1 ஸ்பூன் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
3/ 8
நெல்லிக்காய், துளசி, வேப்பிலை போன்ற ஆயுர்வேத மூலிகைகளையும் ஏதாவதொரு வகையில் உட்கொள்ளுங்கள்.
4/ 8
தினமும் மூலிகை டீ அருந்துங்கள். துளசி டீ, ஏலக்காய் டீ, மிளகு டீ, இஞ்சி டீ என அருந்துங்கள். சர்க்கரைக்கு பதிலாக இரும்பு சத்து கொண்ட வெல்லம் பயன்படுத்துங்கள்.
5/ 8
இரண்டு நாளைக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். அதிலும் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து குடியுங்கள்.
6/ 8
150 ml பாலில் அரை ஸ்பூன் மஞ்சள் கொதிக்க வைத்த கோல்டன் மில்க் தினமும் அருந்துங்கள்.
7/ 8
அஜீரண கோளாறு , வயிறு சுத்தத்திற்கு தினமும் இஞ்சியை அப்படியே சாப்பிடலாம் அல்லது இஞ்சி டீ, புதினா டீ, சோம்பு டீ ஆகியவையும் சாப்பிடலாம்.
8/ 8
தினமும் குடிக்க கொதிக்க வைக்கும் தண்ணீரில் இஞ்சி , சோம்பு , சீரகம், தனியா என ஒரு ஸ்பூன் வீதம் கலந்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.