இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் உலகெங்கிலும் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சதவீதத்தினருக்கும் மட்டுமே இந்த குறைபாடு இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதன் விளைவுகள் மிதமானதாக இருக்கலாம் அல்லது தீவிரத்தன்மை உடையதாக இருக்கலாம். ஆனால், பெரிய அளவுக்கு அறிகுறிகள் எதையும் காட்டாது. இருப்பினும் உடனடி சிகிச்சை அவசியமாகும்.
பிறவி இதய நோயை கண்டறிவது எப்படி.? ஹைதராபாதை சேர்ந்தவரும், குழந்தைகளுக்கான இதயநோய் சிகிச்சை நிபுணருமான, மருத்துவர். தபண் குமார் தாஷ் இதுகுறித்து பேசுகையில், “பிறவி இதய குறைபாடுகளை கருவிலேயே கண்டறியலாம் அல்லது பிரசவத்திற்கு முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். வழக்கமான அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின்போது இது தெரியவரும்.
பச்சிளம் குழந்தைகளிடம் எப்படி கண்டறியப்படுகிறது ? குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே நோயை கண்டறியும் அளவுக்கு சமீபத்திய ஆண்டுகளில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. கருவில் வளரும் குழந்தைகளுக்கான எக்கோகார்டியோகிராஃபி பரிசோதனை செய்யப்படுகிறது. 16 முதல் 24 வார குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனையை செய்ய முடியும்.