மக்களிடையே இதய நோய்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை அறிந்து மதிப்பீடு செய்வது இதய பாதிப்புகள் வராமல் தடுக்க சிறந்த வழி. மேலும் பல சுகாதார நிலைமைகள் இதய பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும். சில நோய்களை அடையாளம் காண எந்த அறிகுறிகளும் இருக்காது. எனவே தான் குறிப்பிட்ட இடைவெளியில் இதய பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம்: உலகளவில், 30-79 வயதுடைய கிட்டத்தட்ட 1.28 பில்லியன் பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. ஒருவருக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்த மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இது பெரும்பாலும் ஒரு சைலன்ட் கில்லர் என்று கருதப்படுகிறது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம் எந்த குறிப்பிட்ட அறிகுறியும் இல்லாமல் உடலுக்குள் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதிக கொலஸ்ட்ரால்: ஹை கொலஸ்ட்ரால் கண்டறியப்படும் ஒரு நபரின் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் அதிகம் காணப்படும், இது தமனிகள் வழியாக போதுமான ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. இந்த கொழுப்பு படிவுகள் திடீரென உடைந்து, கட்டிகளை உருவாக்கி மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் உடலில் ஆரோக்கிய செல்களை உருவாக்க உடலுக்குத் தேவையான ஒரு மெழுகுப் பொருளாக இருந்தாலும், கூட அதன் அதிக அளவு பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி என்றும் அழைக்கப்படும் பிளேக் (plaque) பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோய் : அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC)கூற்றின்படி" உயர் ரத்த சர்க்கரை அளவானது ரத்த நாளங்கள் மற்றும் நம் இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளையும் சேர்த்து சேதப்படுத்தும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான எல்டிஎல் கொழுப்பு (கெட்ட கொழுப்பு) மற்றும் உயர் ட்ரைகிளிசரைடுகள் உள்ளிட்ட பிற நிலைமைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் ஆகும்.
உடல் பருமன்: அதிகரித்த ரத்த அழுத்தம், குளுக்கோஸ் மற்றும் லிப்பிட்கள் தவிர இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட உருவாக்கும் அபாயத்திற்கு அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை பங்களிக்கின்றன. உடல் பருமன் இதய நோய்க்கான (கரோனரி தமனி நோய் மற்றும் பக்கவாதம்) ஆபத்தை அதிகரிக்கும் பல காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடல் பருமனான நபர்களுக்கு உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த ரத்தத்தை அவர்களின் உடலுக்கு அதிக அழுத்தம் தேவைப்படும். உயர் ரத்த அழுத்தம் மாரடைப்புக்கு ஒரு பொதுவான காரணமாகும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள்: ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது, எண்ணெய், பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளை அதிகம் சாப்பிடுவது, குறைவான உடல் செயல்பாடுகள், மனஅழுத்தம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. அதே போல புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவையும் இதை நோய்களுக்கான அபாயத்தை பெரிதும் அதிகரிக்கின்றன.