எளிய தொழில்நுட்பங்கள் மற்றும் 24x7 கிடைக்கும் Diagnostic சர்விஸ்கள் மூலம் இப்போதெல்லாம் ஒருவரது ஆரோக்கியத்தை கண்காணிப்பது எளிதாகிவிட்டது. கொலஸ்ட்ரால், நீரிழிவு மற்றும் பல நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் சூழலில் எந்தெந்தப் பரிசோதனையில் என்ன உடல்நலப் பிரச்சினையைக் கண்டறிய முடியும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோய்: மூத்த மகப்பேறு மருத்துவர் மோனிகா மாலிக் பேசுகையில், நீரிழிவு நோயானது பெண்களின் ஆரோக்கியத்தில் குறிப்பாக கர்ப்ப காலத்தில், பிரசவத்திற்கு பின் மற்றும் மெனோபாஸ் போன்ற பல கட்டங்களில் நீண்ட கால சிக்கல்களை தூண்டி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறிய Fasting Plasma Glucose, Oral Glucose Tolerance மற்றும் Glycated haemoglobin உள்ளிட்ட டெஸ்ட்களை செய்து பார்க்கலாம்.
தைராய்டு: பெண்களின் ஆரோக்கியத்தில் தைராய்டு சோதனை என்பது மிகவும் முக்கியமானது. இதில் அவர்களின் தைராய்டு சுரப்பி செயல்பாடு மதிப்பீடு செய்யப்படுகிறது. தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாத போது பல வழிகளில் அது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சில நேரங்களில் திடீர் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு ஏற்படுவது தைராய்டு செயல்படும் நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். தைராய்டு லெவல் சரியாக இருக்கிறதா என்பதை கண்டறிய மேற்கொள்ளக்கூடிய சோதனைகளில் TSH (தைராய்டு-சிமுலேட்டிங் ஹார்மோன்) டெஸ்ட் அல்லது T4 (தைராக்ஸின்) டெஸ்ட் அல்லது ஓவர்ஆல் தைராய்டு ப்ரொஃபைல் டெஸ்ட் உள்ளிட்டவை அடங்கும்.
ஹைப்பர் டென்ஷன்: அதிக அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை காரணமாக, பெண்கள் பெரும்பாலும் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஹைப்பர் டென்ஷன் கண்டிஷனில் நோயாளிகள் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். எனவே குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பெண்கள் சீரான இடைவெளியில் தங்களது ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்வது மிக முக்கியம். சாதாரண பிளட் பிரஷர் ரேஞ்ச் 120/80 என கருதப்படுகிறது.
கொலஸ்ட்ரால்: லிப்பிட் டெஸ்ட்டானது நல்ல மற்றும் கெட்ட கொழுப்பு, மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ்களின் அளவை அளவிடுகிறது. இது அனைவருக்கும் அவசியமான பரிசோதனை. உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால், இதய பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம். ஏனெனில் ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் குவிகிறது. இந்த பரிசோதனை 30 வயதிற்கு பிறகு ஒருவர் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டெஸ்ட்டிற்கு முன் ஒருவர் 12 மணிநேரம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். டெஸ்ட் ரிசல்ட்டில் சாதாரண முடிவுகளை பெறும் நபர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் லெவல் உள்ள நபர்கள் அல்லது ஆபத்து காரணிகள் உள்ள பெண்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஸ்கிரினிங் செய்து கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி: எலும்பு ஆரோக்கியத்திற்கும், சிறந்த நோயெதிர்ப்பு அமைப்புக்கும் போதுமான அளவு வைட்டமின் டி தேவைப்படுகிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான கேன்சர் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க பெண்கள் தங்களுக்கு இருக்கும் வைட்டமின் டி லெவலை சரிபார்ப்பது முக்கியம். பெண்களுக்கு வயதாகும் போது, வைட்டமின் டி-யை உற்பத்தி செய்யும் திறன் இயல்பாகவே குறைகிறது. இதனால் அடிக்கடி கைகால் வலி, அடிக்கடி எலும்பு முறிவுகள் அல்லது லோ போன் டென்சிட்டியை ஏற்படுத்துகிறது. எனவே மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.
பேப் ஸ்மியர் (Pap Smear): கர்ப்பப்பை வாய் புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டறிவதை உறுதி செய்ய 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முழு இடுப்பு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு HPV தடுப்பூசியை 2 டோஸ்களாக போடப்படுவதன் மூலம் இந்திய பெண்கள் மரணத்தை ஏற்படுத்தும் இந்த கேன்சர் அபாயத்தை தவிர்க்கலாம். தடுப்பூசி போட்டு கொண்டாலும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது 3 வருடங்களுக்கும் குறைவாக பாலுறவில் ஈடுபடுபவர்கள் பேப் ஸ்மியர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறார் டாக்டர் மாலிக்.
மேமோகிராம் (Mammogram) : நாட்டில் நிகழும் கேன்சர் இறப்புகளில் மார்பகப் புற்றுநோய் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இந்த வகை கேன்சரை முன்கூட்டியே கண்டறிவது முக்கியம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் மற்றும் மாதாந்திர சுய பரிசோதனை உட்பட வழக்கமான பரிசோதனையை செய்ய வலியுறுத்தப்படுகிறது. பரிசோதனைகள் மூலம் கட்டிகள், வலி அல்லது டிஸ்சார்ஜ் போன்றவை மார்பு பகுதியில் இருந்தால் கண்டறிந்து உரிய மருத்துவ நடவடிக்கை எடுக்கலாம்.
போன் மினரல் டென்சிட்டி டெஸ்ட் (Bon Mineral Density Test) : எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பெண்கள் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். குறைந்த ஈஸ்ட்ரோஜன் லெவல்ஸ் காரணமாக மாதவிடாய் நின்ற பிறகு இந்நிலை மோசமடைகிறது. எலும்பின் வலிமை மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயத்தைக் கண்டறிய, மாதவிடாய் நின்ற பெண்கள் அல்லது அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும் பெண்கள், DEXA ஸ்கேன் எனப்படும் போன் மினரல் டென்சிட்டி டெஸ்ட்டை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு பெண் 35 வயதை எட்டியவுடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்த டெஸ்ட்டை மேற்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கம்ப்ளீட் பிளட் கவுண்ட் (Complete Blood Count): தொற்றுகள், ரத்த சோகை மற்றும் ரத்த கோளாறுகள் உள்ளிட்ட பல நிலைமைகளை அடையாளம் காண ஒரு vital blood டெஸ்ட் உதவுகிறது. தவிர இதோடு சேர்த்து CBC பரிசோதனை செய்வது, பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை கண்காணிப்பது முக்கியமானது. இதன் மூலம் அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் இருப்பதை கண்டறிய முடியும்.
அலர்ஜிகள்: அலர்ஜிகளை கண்டறிவதில் Allergen-specificIgE டெஸ்ட் முக்கியமானது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் அல்லது கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்களுக்கு இந்த டெஸ்ட் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் தாய் மற்றும் வளரும் கரு என இருவருக்கும் அலர்ஜி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தனக்கிருக்கும் குறிப்பிட்ட அலர்ஜியை தெரிந்து கொள்வது, தன் குழந்தைக்கு அலர்ஜி ரியாக்ஷனை ஏற்படுத்த கூடிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.