ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் உங்களுள் வந்துவிட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று, உங்கள் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும்.

 • 15

  Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

  ஸ்கிப்பிங் vs ரன்னிங்: ஸ்கிப்பிங் மற்றும் ரன்னிங் இரண்டும் செலவில்லாத முழு உடற்பயிற்சிகளாகும். இவை இரண்டும் உங்களுக்கு இதய ஆரோக்கியத்தை தருகின்றன மற்றும் உடலில் பல மடங்கு கலோரிகளை எரிக்க உதவுகின்றன. உங்களின் இதயத் துடிப்பை அதிகரிப்பதுடன், உங்கள் நுரையீரலின் திறனை அதிகரிக்கும் மற்றும் முக்கியமாக உங்களை வியர்க்க வைக்கின்றன. இரண்டு வொர்க்அவுட்களுக்கு இடையிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஆனாலும், அவை ஒன்றுக்கொன்று பல வழிகளில் வேறுபடுகின்றன. இதில், எது சிறந்தது, உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

  தசைகள் வலுப்பெற: ஸ்கிப்பிங் மற்றும் ரன்னிங் இவை இரண்டும் உங்கள் கீழ் உடலில் அழுத்தம் கொடுக்கின்றன. மேலும், உங்கள் மூட்டுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தவிர, ரன்னிங் என்பது உங்கள் பிட்டம் முன்னோக்கி நகர்த்துவது, தோள்கள் மற்றும் கால் இயக்கத்தை சமப்படுத்த உதவுகிறது. ஸ்கிப்பிங், உங்கள் பிட்டம் தசைகள் இயக்கப்படுவதால் இது உங்கள் இடுப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

  கலோரிகளை குறைக்கும்: உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் உங்களுள் வந்துவிட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று, உங்கள் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க வேண்டும். இதில், ஸ்கிப்பிங் மற்றும் ரன்னிங் இரண்டும் சிறந்தவை. ஆனால், ஸ்கிப்பிங்கில் சற்று கூடுதல் நன்மைகள் இருப்பதாக தெரிகிறது. 68 கிலோ எடையுள்ள ஒருவர் மிதமான வேகத்தில் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் 10 நிமிடங்களில் 140 கலோரிகளை எரிக்க முடியும். அதே வேளையில், மிதமான வேகத்தில் ரன்னிங் செய்யும் போது, அதே நபர் 10 நிமிடங்களில் 125 கலோரிகளை மட்டுமே எரிக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 45

  Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

  ரன்னிங் மற்றும் ஸ்கிப்பிங்கின் நன்மைகள்: இரண்டும் ஏரோபிக் பயிற்சிகள் ஆகும். இவை இரண்டும் உடல் கொழுப்பை எரிக்கவும், இருதய செயல்பாட்டை மேம்படுத்தவும், நுரையீரல் திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.

  MORE
  GALLERIES

 • 55

  Skipping vs Running | ஸ்கிப்பிங் vs ரன்னிங்- உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது?

  ஸ்கிப்பிங்கா? ரன்னிங்கா?: இரண்டு செயல்பாடுகளும் ஒருவரது கீழ் பாக உடலை சார்ந்தவை என்பதால் முழங்கால், இடுப்பு அல்லது கணுக்கால் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்காது. அதற்கு பதிலாக, நீங்கள் குறைந்த வேகத்தில் நடக்க அல்லது ஓட முயற்சி செய்யலாம். ஸ்கிப்பிங் செய்தால், உங்கள் முழங்கால்களில் அழுத்தத்தைக் குறைக்க நிலையாக முயற்சிக்கவும். உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்கும்போது, இரண்டையும் முயற்சிக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், உங்களிடம் குறைவான நேரம் இருப்பின், ஸ்கிப்பிங் செய்வது ரன்னிங்கை விட சிறந்த வழியாகும்.

  MORE
  GALLERIES