இன்றைக்குள்ள விஞ்ஞான உலகத்தில் நாள் முழுவதும் அயராது வேலைப்பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நம்முடைய பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் இத்தகைய செயல்களில் நாம் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதுப்போன்ற வாழ்க்கைச் சூழல், ஆரோக்கியமற்ற உணவு போன்ற பல்வேறு காரணங்களினால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, மன உளைச்சலும் ஏற்படுகிறது.
இதனால் எப்படியாவது மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டாலும் எவ்வித பலனும் கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு சிறந்த வழி தோட்டக்கலை என்கின்றது ஆய்வுகள். அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியால் நிதியளிக்கப்பட்ட புதிய கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் (CU) சார்பில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், சமூகத் தோட்டக்கலையில் ஈடுபடுவது, பொழுது போக்கிற்காக மட்டுமில்லாது, அவர்களுக்கு மன அமைதியையும், உடற்தகுதியுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வழங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதோடு புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த சமூகத் தோட்டப்பணிகள் உதவியாக உள்ளது. இதோடு வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 41 வயதைச் சேர்ந்த 291 பேர் பங்கேற்றனர். இதில் பாதி பேர் சமூகத் தோட்டக்கலையில் பங்கேற்றனர். மீதமுள்ள நபர்கள் கட்டுப்பாட்டுக்குழுவில சேர்க்கப்பட்டனர். இரு அணியினரும் தங்களது உணவு முறைகள், மன நலம் மற்றும் உடல் மற்றும் செயல்பாட்டு அளவீடுகளை விவரிக்கும் ஆய்வுகளில் பங்கேற்றனர்.
தோட்டக்கலை குழு ஒரு நாளைக்கு சராசரியாக 1.4 கிராம் நார்ச்சத்து அல்லது கட்டுப்பாட்டுக் குழுவை விட சுமார் 7% அதிகமாக உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. தோட்டக்கலையில் ஆர்வம் காட்டுபவர்கள் பொதுவாக அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வார்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கிறார்கள். எனவே எவ்வித உடல் நலப்பிரச்சனையும் இன்றி வாழ முடிகிறது என்பது கண்டறியப்பட்டது.
சமூகத் தோட்டக்கலையினால் ஏற்படும் நன்மைகள் : இன்றைய மக்கள் நல்ல உணவு மற்றும் செயல்களில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் இதுப்போன்ற உணவுகள் நமது கிடைப்பதில்லை. எனவே நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால், அனைவரும் ஒன்றிணைந்து சமூகத தோட்டப்பணி மேற்கொள்ளலாம். இதன் மூலம் மன அமைதியாகவும், நிதானமாகவும், எந்தவொரு பிரச்சனையின் போது மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் நிலையை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.