முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

நீங்கள் 10 நிமிடம் வாக்கிங் சென்று கரைக்ககூடிய கலோரியை வெறும் 5 நிமிடத்தில் படிக்கட்டில் ஏறி இறங்கினால் கலோரிகளும் குறைந்துவிடுவதோடு உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது.

 • 16

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  பொதுவாகவே தினமும் காலையில் எழுந்து வாக்கிங் சென்று வருவது நம்முடைய உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல், மனதிற்கும் நன்மை பயக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள இயந்திர உலகில், குடும்பத்தினருடன் பேசுவதற்கே நேரம் இல்லாத நிலையில், உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது என்பது அனைவருக்கும் முடியாத காரியமாகிவிட்டது. சிலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரமும் கிடைக்காது, சிலருக்கு சூழலும் வாய்க்காது. இது போன்ற நேரத்தில் தான், நீங்கள் உடற்பயிற்சி செய்வதை விட படிக்கட்டில் ஏறி இறங்குவதால் பல ஆரோக்கிய நன்மைகளோடு உடல் எடையையும் குறைக்க முடியும் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  நீங்கள் 10 நிமிடம் வாக்கிங் சென்று கரைக்ககூடிய கலோரியை வெறும் 5 நிமிடத்தில் படிக்கட்டில் ஏறி இறங்கினால் கலோரிகளும் குறைந்துவிடுவதோடு உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  எனவே நீங்கள் பகலில் வீட்டைச் சுற்றி செல்லவோ அல்லது பூங்காவிற்குச் செல்லவோ விரும்பாத வகையாக இருந்தால், நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கினாலே உங்களது உடல் எடையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். பொதுவாக தினமும் 10000 படிகள் என்பதை நீங்கள் இலக்காக கொண்டால், நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையாக அமையும். எனவே நீங்கள் சில ஆயிரம் படிகளுடன் தொடங்கி, உங்கள் தினசரி வழக்கத்தில் கூடுதல் செயல்பாட்டைக் கொண்டுவர வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  குறிப்பாக ஒவ்வொரு நாளும் 1 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் நேரம் உங்கள் நாளின் 4% மட்டுமே இருக்கும். மேலும் நீங்கள் வாரத்திற்கு 3 முதல் 5 முறை மட்டுமே வேலை செய்கிறீர்கள் என்றால், நீங்கள் வொர்க்அவுட் செய்யும் 1 மணிநேரத்தில் நீங்கள் உடலில் எரிக்கும் மொத்த கலோரியை விட, மீதமுள்ள நாட்களில் நீங்கள் செய்யும் செயல்பாடுகள் மிக அதிகம்.

  MORE
  GALLERIES

 • 56

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  எனவே, நாள் முழுவதும் ஒரு சில ஆக்டிவிடிஸ்களை மேற்கொள்வது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மற்றும் ஒவ்வொரு நாளிலும் அதிக கலோரிகளை குறைக்க வைக்கிறது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே தினமும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை விட படிக்கட்டுகள் ஏறி இறங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 66

  ஒர்க்அவுட்டை காட்டிலும் இப்படி படிக்கட்டில் ஏறினால் சீக்கிரமே உடல் எடையை குறைச்சிடலாம்..!

  படிக்கட்டில் ஏறி இறங்குவதால் ஏற்படும் நன்மைகள்..
  உடற்பயிற்சி செய்வதை விட நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கும் போது உங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். மேலும் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, தினமும் 10 நிமிடமாவது, நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கினால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES