திருமணம் ஆன புதிதில் பாலியல் உறவின் மீது இருக்கும் ஆர்வமும் விருப்பமும் மாதங்கள், வருடங்கள் செல்ல செல்ல குறைந்து விடும். ஒரே மாதிரியான வாழ்க்கை என்பது சலிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பாலியல் உறவில் இருவரில் ஒருவருக்கு அல்லது இருவருக்கும் விருப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறையக் கூடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உறவு நீடித்து நிலைத்திருக்க ஆரோக்கியமான செக்ஸ் லைஃப் என்பது மிக மிக முக்கியம். எனவே திருமண உறவில் இருக்கும் ஸ்பார்க் குறையாமல் இருக்க, வாழ்க்கை அழகாக இருக்க பாலியல் வாழ்க்கையில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான டிப்ஸ் இங்கே.
பாலியல் உறவுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள் : பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு என்று தனிப்பட்டு நேரம் கிடைக்காமல் இருக்கும் தம்பதிகள் பலர் இருக்கின்றனர். உங்கள் அன்றாட வேலைகளுக்கு எல்லாம் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்களோ, அதேபோல பாலியல் உறவுக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம். அட்டவணை போட்டு செக்ஸ் வைத்துக்கொள்வது என்பது ரொமாண்டிக்காக இல்லை, ஏதோ வேலை அல்லது மீட்டிங் போல இருக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் பிசியாக ஓடி கொண்டிருக்கும் காலத்தில் இதற்கென நேரம் ஒதுக்குவது உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும், சலிப்பாக இருக்கும் மன ஓட்டத்தை மாற்றும்.
ஒருவருக்கு விருப்பமில்லை என்றால் வற்புறுத்த வேண்டாம் : செக்ஸில் தம்பதிகள் இருவருமே விருப்பத்துடன் ஈடுபட்டால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லை என்றால் கூட அதை வற்புறுத்தவே கூடாது. தம்பதிகளில் யாரேனும் ஒருவர் நெருக்கமாக இருப்பதை தவிர்க்கிறார் என்றால் அதற்கு பலவித காரணங்கள் இருக்கும். எனவே நீங்கள் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் பாலியல் உறவுக்கு என்று வலியுறுத்திக்கொண்டே இருப்பது இருவருக்குள்ளும் பல பிரச்சனைகளை உருவாக்கலாம்.
தாம்பத்ய உறவு என்பது ‘இன்டர்கோர்ஸ் மட்டுமல்ல : பொதுவாகவே செக்ஸ் அல்லது தாம்பத்ய உறவு என்று கூறும்போது பலரும் இன்டர்கோர்ஸ் அதாவது செக்ஸுவல் பெனிட்ரேஷன் என்பதை மட்டும்தான் பாலியல் உறவு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஓரல் செக்ஸ், முத்தமிடுவது, ஃபோர் பிளே உள்ளிட்டவை கூட உங்களுடைய செக்ஸ் ரொட்டினாக இருக்கலாம். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நெருக்கம் அதிகரிக்கும்.
டேட் நைட் திட்டமிடுங்கள் : திருமணமானவர்கள் தங்களுக்குள் இருக்கும் ரொமான்ஸை குறையாமல் பார்த்துக் கொண்டாலே வாழ்க்கை அழகாக இருக்கும். ரொமான்ஸ் என்று வரும்போது காதலிப்பவர்கள், புதிதாக திருமணமானவர்களுக்கு மட்டும் கிடையாது. பரிசு அளிப்பது, நைட் டிரைவ், டேட்டிங் செல்வது என்பதெல்லாம் திருமணமானவர்களுக்கும் பொருந்தும். பாலியல் உறவை மேம்படுத்த டேட் நைட்டைத் திட்டமிடலாம். இதற்கு நீங்கள் அட்டவணை போட்டு, குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட நேரம், ஆடை ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம் அல்லது அந்த நொடியில் ஸ்பாண்டேனியஸ்-ஆக டேட்டுக்குத் திட்டமிடலாம். உங்கள் இருவருக்கும் பிடித்த இடம், கடற்கரை அல்லது ஃபேன்சி ஒரு உணவகம், கேண்டில்லைட் டின்னர் ஆகியவற்றை திட்டமிட்டால் நிச்சயமாக பாலியல் உறவு மேம்படும்.
உங்கள் பார்ட்னருக்காக காத்திராமல் நீங்களே முன்னெடுக்கலாம் : பொதுவாகவே ஒரு சில தம்பதிகளுக்குள், யார் முதலில் பாலியல் உறவைத் தொடங்குவது என்ற தயக்கம் இருக்கும். இதில் பெண்கள் தங்களுடைய பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அல்லது பாலியல் உறவை தொடங்குவதற்கு பெரிய அளவில் தயக்கம் காட்டுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது யாரேனும் ஒருவர் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து உங்கள் பார்ட்னர் மூவ் செய்வதற்காக காத்திருக்காமல், நீங்களே தொடங்கலாம்.
அன்பையும் காதலையும் வெளிப்படுத்துங்கள் : திருமணத்தில் குறைந்த அல்லது தொலைந்த நெருக்கத்தை மீட்பதற்கு அன்பையும் காதலையும் வெளிப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். திருமணமான தம்பதிகள் ஒரு கட்டத்தில் ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த மறந்து விடுகின்றனர். இதனாலேயே பாலியல் உறவில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. அவ்வப்போது உங்கள் கணவன் / மனைவிக்கு பிடித்த விஷயத்தை வாங்கிக் கொடுப்பது, அணைப்பது, முத்தமிடுவது, சோர்வாக இருந்தால் அவருடைய வேலைகளை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் பாலியல் வாழ்க்கை மேம்படும், திருமண உறவு வலுவாகும்.