தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்: WHO (உலக சுகாதார அமைப்பு) படி, 2020 ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் மரணத்திற்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தோமேயானால் ஒவ்வொரு 6 இறப்புகளில் ஒன்று புற்றுநோயால் ஏற்படுகிறது. புற்றுநோய் என்பது ஒரு கொடிய வகை நோய் என்ற எண்ணமும் அதனை பற்றிய பயமும் மக்கள் மனதில் தொடந்து இருந்து வருகிறது. குறிப்பாக புற்றுநோய் வருவதற்கு காரணமாக சில சமயங்களில் நமது வாழ்க்கை முறையே காரணமாக அமைந்து வருகிறது.
புற்றுநோயின் அறிகுறிகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டால், அதை எளிதாக குணப்படுத்த முடியும். அந்த வகையில் தொண்டை புற்றுநோய் என்பதின் பாதிப்பு என்பதும் பயம் தரக்கூடியதாகவே இருக்கிறது. அதன் அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு முன்பே தோன்றத் தொடங்குகின்றன. சிகரெட், மது, புகையிலை, குட்கா போன்றவை தொண்டை புற்றுநோய்க்கு முக்கியமாக காரணமாகின்றன. எனவே, தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்தால், இந்த கொடிய நோயைத் தவிர்க்கலாம்.