வயிற்று வலி, உப்பசம், வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். மீண்டும் மீண்டும் வரும் வயிற்று வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் சம்பந்தப்பட்ட ஒரு பரவலான நிலையான IBS அடிக்கடி ஏற்படும் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் அல்லது முந்தைய குடல் நோய்த்தொற்று ஆகியவற்றுடனும் தொடர்புடையது.
சுருக்கமாக சொன்னால் குடலின் கட்டமைப்பை பாதிக்காமல், ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு செயல்பாட்டுக் கோளாறு ஆகும். IBS நிலை ஒருவருக்கு இந்த காரணத்தினால் தான் வருகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் இதன் அறிகுறிகள் சில உணவுகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மருந்துகளால் தூண்டப்படுவதாக கருதப்படுகிறது. IBS-ற்கான சிகிச்சையில் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் அடங்கும். இவை போதுமானதாக இல்லாவிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலுக்கான மருந்துகளும் அடங்கும். பல பிரபலங்களும் கூட இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
IBS-ஆல் பாதிக்கப்பட்ட சில பிரபலங்களின் பட்டியல் : மும்தாஜ் மத்வானி : பழம்பெரும் பாலிவுட் நடிகையான மும்தாஜ் கடந்த மே மாதம் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்தாஜ் அஸ்காரி மத்வானி என்பது இவரது முழுப்பெயர். 75 வயதான நடிகை மும்தாஜ் 1947-ல் பிறந்தவர் ஆவார். கடந்த 1960 - 1970-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
டைரா பேங்க்ஸ் : டெலிவிஷன் பர்சனாலிட்டி , மாடல், தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகை என் பன்முகங்களை கொண்ட அமெரிக்காவை சேர்ந்த டைரா பேங்க்ஸ், கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் பிறந்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜேனட் ஜாக்சன் விருந்தினராக பங்கேற்ற ஒரு டாக் ஷோவை தொகுத்து வழங்கிய டைரா பேங்க்ஸ் ஜாக்சனிடமும், பார்வையாளர்களிடமும் தனக்கு IBS இருப்பதாகவும் இதனால் தான் வாயு தொல்லையால் அவதிப்படுவதாகவும் வெளிப்படையாக பேசினார்.
கேமில் கிராம்மர் : கேமில் கிராம்மர் ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாகவும் இருக்கிறார். இவருக்கு கடந்த 1996-ஆம் ஆண்டு IBS நிலை இருப்பது கண்டறியப்பட்டது. பின்னாளில் இவர் இரைப்பை குடல் கோளாறுகளுக்கான சர்வதேச அறக்கட்டளைக்கான செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார்.
ஜென்னி மெக்கார்த்தி : வெளிப்படையாக பேசுவதற்காக நன்கு அறியப்பட்ட மாடலும், அமெரிக்க நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி, தனது ஓபன் புக்கான Jen-X-ல் வயிற்றுப்போக்கால் அவதிப்படுவதால், ஒல்லியாக இருக்க உணவு மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் IBS நிலைகளை முக்கியமாக வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அனுபவித்து வருவதாக கூறி இருந்தார்.
கர்ட் கோபேன் : கர்ட் டொனால்ட் கோபேன் ஒரு அமெரிக்க இசைக்கலைஞர் ஆவார், இவர் நிர்வாணா ராக் இசைக்குழுவின் முன்னணி பாடகராக இருந்தார். கடந்த 1994-ஆம் தற்கொலை செய்து கொண்டு இறந்த இவர் தனது சூசைட் நோட்டில் மருத்துவர்களால் அடையாளம் காண முடியாத ஒரு பயங்கரமான வயிற்று நோயைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். நாள்பட்ட குமட்டல், வாந்தி மற்றும் வேதனை மிகுந்த வயிற்று வலியிலிருந்து தப்பிக்க இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் IBS அறிகுறிகளில் இருந்து மீள இவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும் தெரிகிறது.
கிரிஸ்டன் டன்ஸ்ட் : IBS-ஆல் பாதிக்கப்பட்ட மற்றொரு பிரபலம் கிரிஸ்டன் டன்ஸ்ட். இந்த நிலை தன் சுயமரியாதை மற்றும் மனநலனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 2006 -ல் இதுபற்றி வெளிப்படையாக பேசிய இவர், தனது IBS மற்றும் அவரது கவலை & மனச்சோர்வுக்கு இடையே ஒரு நேரடி தொடர்பு இருப்பதாக தோன்றுகிறது என்றார்.
ஜான் எஃப். கென்னடி : அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து மறைந்த ஜான் எஃப். கென்னடி, தனக்கிருந்த பல நோய்களை பற்றி வெளியில் தெரியாமல் பார்த்து கொண்டதாக, அவரது மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்த ஒரு மருத்துவ ஆலோசகர் வெளிப்படுத்தினார். இதில் அடிக்கடி ஏற்பட்ட கடுமையான வயிற்றுப்போக்கும் அடக்கம். இதற்கு அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி காரணமாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.