

உடல் பருமன் என்பது உலகம் முழுவதும் பரவலாக காணப்படும் பிரச்சனை ஆகும். எடை அதிகரிப்பதற்கான பொதுவான காரணமாக மோசமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த இரு காரணங்கள் தவிர மேலும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. மருத்துவம் அல்லது வயது தொடர்பான சில காரணங்களும் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.


அதிலும் 40 வயதினை தாண்டிய பெண்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான அடிப்படை காரணங்களை தெரிந்துகொண்டால் போதும் எடையை குறைப்பது மிகவும் எளிது. அதன்படி 40 வயதுக்கு மேல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து காண்போம். ஆனால் கீழ்காணும் காரணங்கள் சிலருக்கு பொருந்தலாம். சிலருக்கு பொருந்தாலும் போகலாம்.


இன்சுலின் அதிகரிப்பு உடை பருமனுக்கு காரணமாகலாம்: ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சர்க்கரை உணவை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்க்கரையை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. ஏனெனில் சர்க்கரை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும், மேலும் இது உங்கள் உடல்நலத்தை பாதிக்கும். 40 வயதை தாண்டிய பிறகு, உங்கள் உணவில் நிறைய சர்க்கரை இருந்தால், நீங்கள் விரைவாக உடல் எடையை பெற வழிவகுக்கும். உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும் என்பதால் இது நிகழ்கிறது. அதிகப்படியான சர்க்கரை உடல் எடை மட்டுமல்ல, உண்மையில் வகை 2 நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கிறது.


குறைந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் : உடலில் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்ட என்சைம்கள் நிறைய உள்ளன. இதில் எதாவது ஒன்று அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அது ஒன்று அல்லது வேறு பல சிக்கலுக்கு வழிவகுக்கும். புரோஜெஸ்ட்டிரோன் அளவைப் பொறுத்தவரை, இது மறைமுகமாக எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனில் இது வீக்கம் மற்றும் நீர் தக்கவைப்புக்கு காரணமாகிறது. மேலும் உங்களை அதிக கனமாக உள்ளவர்கள் போல் உணர வைக்கும். இது தொடர்பான பிரச்சனைக்கு உங்கள் மருத்துவரை அணுகி அலையோசனை பெறுவது நல்லது. மேலும் உடல் சிறப்பாக ஜீரணிக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்.


மன அழுத்தம் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் : ஒரு குறிப்பிட்ட வயது எட்டியவுடன் உங்களுக்கு பொறுப்புகள், அதனுடன் அதிக பதற்றம் ஆகியவற்றின் காரணமாக மனஅழுத்தம் அதிகரிக்கிறது. வேலை, வீடு மற்றும் வாழ்க்கை தொடர்பான ஒரு குறிப்பிட்ட அளவு மன அழுத்தத்தை நீங்கள் கையாளுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடல்நலத்தை பாதிக்கலாம். இதன் விளைவாக கூட உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்.


அதிக பசி உணர்தல்: ஒருவர் மிக குறைவாக சாப்பிட்டாலும் சரி, மிக அதிகமாக சாப்பிட்டாலும் சரி இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மோசமானதாக மாறிவிடும். 40 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகம் மனநிலை மாற்றங்கள் மற்றும் வெவ்வேறு ஹார்மோன் சிக்கல்களைக் கையாளுகிறார்கள். பெரும்பாலும் இது மாதவிடாய் நிற்பதால் நடைபெறுகிறது. இதன் விளைவாக, பெரும்பாலான பெண்கள் அதிக பசியை உணர்கிறார்கள். சரியான அளவில் உணவை உட்கொண்டவர்களுக்கு இது மிகச் சிறந்ததாக இருக்கும் போது, உணவை அதிகம் உட்கொள்பவர்களுக்கு எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.