பால் கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. என்பதால் ஆயுர்வேத குறிப்புகளின்படி இரவு பால் குடிப்பது நல்லது என்கின்றனர். வெறும் பாலாக அல்லாமல் அதில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் இரவு தூக்கம் நிம்மதியாக இருக்கும் என்கிறது. அதேசமயம் பாலில் உள்ள அமினோ ஆசிட் இரவு குறட்டை விடும் பழக்கத்தை குறைக்க உதவும் என்கிறது. அதேபோல் அது நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம்.
ஆனால் மருத்துவர்களோ இரவு பால் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் சற்று சர்க்கரை நிறைந்தது. எனவே இரவு படுக்கைக்கு முன் குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில்தான் நச்சு நீக்கி வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் ஹெவியான பால் அருந்துவிட்டு படுக்கும்போது அதன் வேலையை மடைமாற்றம் செய்வதாக இருக்கும். பின் அது நச்சு நீக்கம் செய்யாமல் அருந்திய பாலை செரிமானமாக்க வைத்து அதன் ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலைகளில் இறங்கிவிடும்.