இன்றைக்கு 100 ல் 90 பெண்களுக்கு உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி. வழக்கமாக வரக்கூடிய 28 நாள்கள் சுழற்சி என்பது ஹார்மோன் பிரச்சனையாவல் மாறி மாறி இன்றைக்கு 3 அல்லது 4 மாதங்கள் ஆனாலும் பல பெண்களுக்கு சரியான மாதவிடாய் வருவதில்லை. இதனால் இளம் வயதில் இருந்தே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவு தான், பல உடல் நல பிரச்சனைகள் முதல் திருணமத்திற்கு பின்னதாக கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது.
பெண்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, மனச்சோர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தான். எனவே முறையான உணவு பழக்கத்தைப் பின்பற்றுதல் முதல் வழக்கமான உடற்பயிற்சி செய்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இல்லையென்றால் பிசிஓடி பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக நமது உடலில் ஹார்மோன்கள் முறையாக சுரந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஒழுங்கற்ற மாதவிடாயை நீங்கள் கண்டுக்கொள்ளாமல் விடும் பட்சத்தில் இதய நோய்கள் மற்றும் பக்கவாரம் ஏற்படுவதோடு, இதன் பாதிப்பை கிட்டத்தட்ட இரடிப்பாக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் மெட்ஃபோர்மின், ஏசிஇ/ஏஆர்பி இன்ஹிபிட்டர்கள், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டேடின்கள் போன்ற மருந்துகளின் பயன்பாடு இந்த நோயாளிகளுக்கு சிறந்த இருதய விளைவுகளுடன் தொடர்புடையதாகக் காட்டப்படுகிறது. எனவே பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை அலட்சியமாக நினைக்காமல் மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
மேலும் ஒருவேளை ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் உங்களுக்கு இருதய அல்லது நரம்பியல் அறிகுறிகள் தோன்றினால், அனுபவம் வாய்ந்த இருதயநோய் நிபுணரிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தவொரு பாதிப்பாக இருந்தாலும் ஆரம்ப நிலையிலேயே நீங்கள் கண்டறியும் போது பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.