ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

Reason For Kids Diabetes : குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான காரணங்கள் என்ன ?

 • 18

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 42 கோடிக்கும் மேலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது இம்யூன் சிஸ்டம் குறைபாடாகும். நீரிழிவை பொறுத்தவரை பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக சமீப காலமாக பல குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டு வயது அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளன. குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் எவ்வாறு உண்டாகும்?

  MORE
  GALLERIES

 • 28

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  பொதுவாகவே ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மிட்டாய், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். அழுது அடம் பிடித்து ஏதாவது அதிக இனிப்புகளை சாப்பிடுவார்கள். ஆனால் அதிகப்படியான சர்க்கரை சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் உண்டாகிறது என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா என்பது வரும் என்பது தவறான கருத்து சர்க்கரை அல்லது இனிப்பு சாப்பிடுவதற்கும் நீரிழிவுக்கும் என்ன தொடர்பு இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 38

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  அதிக சர்க்கரை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருமா? குழந்தைக்கு ஏதாவது உடல்நல பாதிப்பு வந்தாலே, குழந்தையை எதையோ சாப்பிட்டதால் தான் உடலுக்கு ஏற்றுக்கொள்ளவில்லை என்று பெரும்பாலானவர்கள் மருத்துவரிடம் கேட்பார்கள். அதிக இனிப்பு சாப்பிட்டால் வயிற்று வலி வரும் அல்லது வயிற்றில் பூச்சி உருவாகும். இந்த காரணங்களை வைத்து குழந்தையை சாப்பிட்டதால் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு உள்ளது என்று பலரும் நினைப்பார்கள். அது ஒருவகையில் சரிதான் என்றாலும் குழந்தை அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதால் நிச்சயமாக நீரிழிவு நோய் ஏற்படாது.

  MORE
  GALLERIES

 • 48

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவுக்கான காரணங்கள் : சர்க்கரை நோய் டைப் 1 டயாபட்டீஸ் மற்றும் டைப் 2 டயாபட்டீஸ் என்று இரண்டு வகைப்படும். இதில் டைப் 1 நீரிழிவு நோய் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நிலையாகும். அதாவது ஒரு குழந்தை பிறக்கும் போதே அதன் உடலில் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறன் இல்லாமலே குழந்தை பிறக்கும். குழந்தை பருவத்திலிருந்து வாழும் காலம்வரை உடலுக்கு தேவையான இன்சுலினை ஊசி மற்றும் மருந்துகள் மூலமாகவும் உணவு கட்டுப்பாடு மூலமாகவும் பெற முடியும். டைப் 1 நீரிழிவு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே ஒரு குழந்தை எந்த அளவுக்கு சர்க்கரை அல்லது அதிக இனிப்புகளை சாப்பிடுகிறார்கள் என்பது நீரிழிவுக்கு காரணம் இல்லை.

  MORE
  GALLERIES

 • 58

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  டைப் 2 நீரிழிவு என்பது அதிகமாக இனிப்பு அல்லது சர்க்கரை சாப்பிடுவதால் மட்டுமே உண்டாவதில்லை. டைப் 2 நீரிழிவு என்பது ஒரு வாழ்க்கை முறை குறைபாடாகும். நீங்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதன் அடிப்படையில்தான் டைப் 2 நீரிழிவு ஏற்படுகிறது. குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் அதிகப்படியான ஜங்க் உணவுகள், பொறித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது நீரிழிவை உண்டாக்கும். எனவே அதிக இனிப்புகளை சாப்பிட்டால் மட்டுமே குழந்தைகளுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

  MORE
  GALLERIES

 • 68

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  இது பரம்பரை நோய் அல்ல : டைப் 1 டயப்பட்டீஸ் நோய் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே ஜெனிடிக்காக அதாவது குடும்பத்தில் யாருக்கேனும் டைப் 1 டயாபட்டீஸ் நோய் இருந்தால் அது பிறக்கும் குழந்தைக்கு அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்த சதவிகிதம் உள்ளது. குடும்பத்தில் யாரேனும் இந்த குறைப்பாட்டுடன் இருந்தால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு நிச்சயமாக அந்த பாதிப்பு இருக்கும் என்பதை வரையறுத்துக்கூற முடியாது.

  MORE
  GALLERIES

 • 78

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்: குழந்தை பருவத்தில் அதிக இனிப்புகள் சாப்பிடுவதால் குழந்தைக்கு நிச்சயமாக நீரிழிவு வராது. ஆனால் அதே நேரத்தில் அதிக இனிப்பு உணவுகளை சாப்பிடுவது வேறு சில உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். முக்கியமாக பல் சொத்தை உண்டாகும் அபாயம் இருக்கிறது. அது மட்டுமின்றி அதிகப்படியான சர்க்கரை என்பது குழந்தையின் மனநிலையில் அதிகமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

  MORE
  GALLERIES

 • 88

  அதிக இனிப்பு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் உண்டாகுமா?

  பல நேரம் குழந்தைகள் எரிச்சலான மனநிலையில் இருக்கும், கத்தும், மற்றும் அழும். இனிப்பு உடலுக்கு ஆற்றலை குடுப்பதால் இனிப்பு உணவுகளை சாப்பிடாத போது குழந்தையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதுமட்டுமின்றி குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் அதில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே அதிக இனிப்புகளை தவிர்ப்பது குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES