இதில் உள்ள சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் உங்களுடைய நாளை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் காலையில் இளநீரை நீங்கள் பருகலாம் என்கின்றனர் நிபுணர்கள். இருந்தப்போதும் சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இளநீர் சிறந்ததா..? : நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரமாக உள்ளது இளநீர். பொதுவாகவே இவை மெதுவாக ஜீரணமாகும் தன்மை உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகளும் இளநீர் சாப்பிடலாம். இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். நீங்கள் குடிக்கும் இளநீரில் லாரிக் அமிலம் இருப்பதால், உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது மற்றும் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். இதோடு மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு இளநீர் நல்லதா?கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால சர்க்கரை நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
இதன் மூலம் குறைந்த ஜிஐ மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இருப்பினும், கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தினமும் ஒரு கிளாஸுக்கு மேல் தேங்காய்த் தண்ணீரை அல்லது இளநீரைக்குடிக்காதீர்கள். இதனால் உங்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவில் மாறுபாடுகளை உண்டாக்கும்.இது உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.