பெண்களுக்கு நாளமில்லா கோளாறான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் பி.சி.ஓ.எஸ் (PCOS )கருவுறாமை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு பொதுவான காரணமாக இருக்கிறது. இருப்பினும், தேவையற்ற கர்ப்பங்களைத் தவிர்க்க அல்லது கருத்தரிக்க உதவும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் பி.சி.ஓ.எஸ் உடன் தொடர்புடையவை என்று சொல்லப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் உண்மையில் பி.சி.ஓ.எஸ்- க்கு வழிவகுக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்போம்.
பி.சி.ஓ.எஸ்ஸின் உண்மையான காரணம் அறியப்படவில்லை என்றாலும், மரபணு மற்றும் வாழ்க்கைமுறை காரணிகள் அதில் பங்கு வகிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. பி.சி.ஓ.எஸ்ஸை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் என்ற கருத்து முற்றிலும் தவறான கருத்து என்றாலும், பி.சி.ஓ.எஸ்ஸின் கடுமையான பக்க விளைவுகளை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்துவதற்கு கருத்தடை மாத்திரைகளும் உதவுகின்றன என்பது தெரியுமா?
அதாவது இவை மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துதல்.
எண்டோமெட்ரியல் புற்றுநோய் அல்லது நோய்களின் அபாயத்தைக் குறைத்தல், முகப்பரு அல்லது தோல் பிரச்சினைகளை அழித்தல்.
மாதவிடாயின்போது வயிற்றுப் பிடிப்பை நீக்குவது, கருமுட்டையில் நீர்க்கட்டிகளின் அபாயத்தைக் குறைத்தல் போன்றவற்றை செய்கிறது. அதோடு இது இரத்தப்போக்கை கணிசமாகக் குறைத்து பெண்களுக்கு இரத்த சோகை அபாயத்தைத் தவிர்க்கும்.
பி.சி.ஓ.எஸ்ஸை ஊக்குவிப்பதில் கருத்தடை மாத்திரைகள் காரணமில்லை என பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆனால் அத்தகைய மாத்திரைகளைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். உங்கள் மருத்துவர் பரிந்துரைத்ததை நீங்கள் எப்போதும் தேர்வு செய்ய வேண்டும், இல்லையெனில் அதிக இரத்தப்போக்கு, குமட்டல்,தலைவலி அல்லது உடல் வலிகள், மார்பக புண்கள் அல்லது விரிவாக்கம் ,எடை ஏற்ற இறக்கங்கள், மனம் ஒருநிலையின்மை போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
பி.சி.ஓ.எஸ் பொதுவாக உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பு, முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இருப்பினும், நீங்கள் யோகா மற்றும் உடற்பயிற்சியை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், உங்கள் இயல்பான எடையைக் கடைப்பிடிக்க உதவும். இது ஆண்ட்ரோஜனைக் குறைப்பதற்கும், ஹார்மோன் லுடினைசிங் செய்வதற்கும், அண்டவிடுப்பின் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் இன்சுலின் அளவிற்கும் காரணமாக இருக்கும். உங்கள் வளர்சிதை மாற்றம் மற்றும் பிரதான உடல் உறுப்புகளின் பிற செயல்பாடுகளை சீராக்க வைட்டமின், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். சில நீரிழிவு மருந்துகள் இன்சுலின் எதிர்ப்பின் பி.சி.ஓ.எஸ் அறிகுறிக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன. அண்டவிடுப்பை மேம்படுத்துகின்றன. பி.சி.ஓ.எஸை கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகி பரிந்துரைக்கப்பட்ட மருந்தைப் பின்பற்றவும்.