கர்ப்பகாலத்தில் பெண்கள் அண்டர்வியர் மற்றும் ப்ரா அணியலாமா வேண்டாமா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படும். உள்ளாடைகளை காட்டாயம் கர்ப்பிணிகள் அணியலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் அணியும் உள்ளாடைகள் உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
பெரும்பாலும் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும் ஒரே ஒரு கவலை என்னவென்றால், அண்டர்வியர் அணிவதால் அது குழந்தைக்கான இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் மற்றும் ப்ரா அணிவதால் அது பால் உற்பத்தியைத் தடுக்கக்கூடும் என்பது தான். பால் உற்பத்தி உங்கள் கருவில் குழந்தை உருவாவதற்கு முன்பே தொடங்குகிறது. எனவே இந்த பயம் பெரும்பாலும் ஆதாரமற்றது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நீங்கள் பெரும்பாலும் இறுக்கமான ப்ரா அணிந்தால் மட்டுமே உங்கள் பால் உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.
பல பெண்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டெர்களில் இருக்கமான பட்டை அல்லாத ப்ராக்களைத் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால் அதில் அவர்கள் மிகவும் வசதியாகவும், சவுகரியமாகவும் இருப்பார்கள். உண்மையில், தாய்ப்பாலூட்டுவதற்குத் திட்டமிடும் பல பெண்கள், கர்ப்ப காலத்தில் நர்சிங் ப்ராக்களுக்கு மாறுகிறார்கள்.