கர்ப்பகாலத்தில் உண்ணும் உணவுகள் இரு உயிர்களுக்கானது என்பார்கள். அதாவது தாய்க்கும் , கருவில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் நாம் உண்ணும் உணவுகள்தான் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எதிர்கால ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. எனவேதான் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என கூறுவார்கள். அப்படி கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் கர்ப்பிணிகளுக்கு மட்டுமன்றி குழந்தையின் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவும். எனவே தினசரி இந்த பழ வகைகளில் ஒன்றை சாப்பிடுவது கால்சியம் சத்தை அதிகரிக்கும். அவை என்னென்ன பார்க்கலாம்.