ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

மார்பக சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது. மார்பக காம்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படுவது மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

 • 16

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  ஆண்களை பொருத்தவரையில் விதைப்பை புற்றுநோய் ஏற்படுவதும், பெண்களை பொருத்தவரையில் மார்பக புற்றுநோய் ஏற்படுவதும் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. ஆகவே, பெண்கள் தங்கள் மார்பகங்களை தினசரி சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது. மார்பகங்களில் அசாதாரணமான அறிகுறிகள் அல்லது கட்டிகள் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாக மகப்பேறு மருத்துவர் அல்லது பொதுநல மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். அனைத்து மார்புக் கட்டிகளும் புற்றுநோயை மாறக் கூடியதல்ல என்றாலும், எந்தக் கட்டி புற்றுநோய் அபாயம் கொண்டது, எது சாதாரணமானது என்று வேறுபடுத்தி பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 26

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  புற்றுநோய் கட்டிகளின் பண்புகள் : மார்புகளில் உருவாகும் புற்றுநோய் கட்டிகள் வலியற்றதாக இருக்கும். பெரும்பாலான சமயங்களில் இந்த புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதில்லை அல்லது சாதாரண பிரச்சினை என்று தவறாக கணிக்கப்படுகிறது. எனினும், புற்றுநோய் கட்டிகளை அதன் பண்புகளை வைத்து கணிக்கலாம். இந்த கட்டிகள் முறையற்ற அளவில் இருக்கும். தோல்களுக்கு அடியில் நகர்த்த இயலாது. பெரும்பாலும் மார்பகத்தின் மேல் நுனி பகுதியில் இந்தக் கட்டிகள் உருவாகும்.

  MORE
  GALLERIES

 • 36

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  ஆபத்தற்ற கட்டிகள் என்றால் என்ன : அபத்தற்ற கட்டிகள் என்றால், அவற்றின் மூலமாக புற்றுநோய் உருவாகாது. ஆனால், கொஞ்சம் வலியை ஏற்படுத்தும். புற்றுநோய் கட்டிகள் இறுக்கமானதாக இருக்கும். ஆனால், இந்த ஆபத்தற்ற கட்டிகள் இலகுவானதாக, வலி மிகுந்ததாக இருக்கும். மார்பு காம்புகளில் வலி, மார்புகளில் இருந்து மஞ்சள் அல்லது பச்சை நிற கசிவு ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  ஆபத்தற்ற கட்டிகளுக்கான காரணங்கள் : ஆபத்தற்ற மார்புக் கட்டிகள் என்றால், அது திரவம் நிரம்பிய கட்டியாக இருக்கும். மார்பகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஆபத்தற்ற கட்டிகள் உருவாகும். பொதுவாக 18 முதல் 35 வயது வரையிலான பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் : மார்பு அல்லது அக்குள் பகுதியில் புதிய கட்டி உருவாகுவது. மார்பகத்தின் ஒரு பகுதி மெலிந்து போவது அல்லது வீக்கம் அடைவது. மார்பக சருமத்தில் எரிச்சல் ஏற்படுவது. மார்பக காம்பு பகுதியில் கடுமையான வலி ஏற்படலாம். மார்பக காம்புகளில் ரத்தக்கசிவு மற்றும் இதர நீர்க்கசிவு ஏற்படும். மார்பகத்தின் அளவு மாறுபடலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  மார்புக் கட்டிகள் புற்றுநோயை ஏற்படுத்துமா? - எப்படி தெரிந்து கொள்வது?

  சுயபரிசோதனை செய்து கொள்ளலாம் : மார்பகத்தில் உருவாகியிருக்கும் கட்டி புற்றுநோய் வகையைச் சேர்ந்ததா அல்லது சாதாரண கட்டியா என்பதை தெரிந்து கொள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் உங்களுக்கு அல்ட்ராசவுண்ட், மேமோகிராம் அல்லது எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகளை செய்வார். உங்களுடைய கட்டி சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் பயாப்ஸி பரிசோதனை செய்யப்படும்.

  MORE
  GALLERIES