இந்த கொரோனா நெருக்கடி என்பது ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. ஏனெனில் ஏற்கெனவே அவர்களின் உடல் நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்து குறைவாக இருப்பதால் கொரோனா வைரஸிற்கு தொற்றிக்கொள்ள ஏதுவாக உள்ளது. எனவேதான் அவர்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
அந்த வகையில் பெண்களை அதிகம் தாக்கும் மார்பகப் புற்றுநோய் இந்த கொரோனா நெருக்கடியில் கண்டுக்கொள்ளப்படாத தலைப்பாக மாறிவிட்டதோ என மருத்துவர்கள் அச்சப்படுகின்றனர். காரணம் ICMR வெளியிட்டுள்ள 2020 ஆண்டிற்கான தேசிய புற்றுநோய் பதிவுத்திட்ட அறிக்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.
ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மூலம் கண்டறிந்துவிட்டால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தி குணமாக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்து, கொரோனா தொற்று இருந்தால் காப்பாற்றுவது சிரமம்தான் என்கின்றனர். எனவே எச்சரிக்கையுடன் ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது நல்லது என்கின்றனர்.