மலச்சிக்கல் ஏற்படுத்தும் கடும் துன்பம் அதனை அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும். பௌவல் பிளாக்கேஜ் (Bowel blockage) அதாவது குடல் அடைப்பு என்பது நாள்பட்ட மலச்சிக்கலின் எதிர்மறை பக்க விளைவுகளில் ஒன்றாகும். பெருங்குடல் மற்றும் சிறுகுடல் வழியாக உணவு செல்வதை கட்டுப்படுத்தும் அடைப்பு பௌவல் பிளாக்கேஜ் ஆகும்.
குடல் அடைப்பு ஏற்பட என்ன காரணம்.? பெருங்குடல் அல்லது மலக்குடலில் இருந்து வெளியேற முடியாத உலர்ந்த, கடினமான மலத்தால் ஏற்படும் பிரச்சனை fecal impaction. செரிமான மண்டலத்தில் தேங்கிய கடின மலத்தை ஒருவரால் சாதாரணமாக வெளியேற்ற முடியாதபோது இது நிகழ்கிறது. பல வழிகளில் குடல் அடைப்பு ஏற்படுகிறது. ஒரு நபரின் குடல் ஒரே இடத்தில் முறுக்கி கொள்ளும் நிலை ஏற்படலாம். இதன் காரணமாக குடல் வழியே எதுவும் சீராக செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படலாம். இதனால் குடல் வீங்கலாம். ஒரு டெலஸ்கோப்பை போல குடலின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு செல்ல முடியும், இந்த நிலை குடல்செருகல் (Intussusception) என்பதாகும். உடலின் உள்ளுறுப்பான குடலின் ஒரு பகுதி அதற்கு அருகிலுள்ள குடல் பகுதியுடன் மடிந்து இணையும் மருத்துவ நிலையை இது குறிக்கிறது. scar tissue அல்லது ஹெர்னியா காரணமாக ஒரு நபரின் குடல் மிகவும் இறுக்கமாக இருக்கலாம். அதே போல குடலில் உள்ள கட்டி அல்லது வளர்ச்சி காரணமாகவும் குடல் அடைப்பு ஏற்படலாம்.
நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும் வழிகள்:
சைலியம் உமி: இதற்கு ஆங்கிலத்தில் Psyllium husk என்று பெயர். இதற்கு மற்றொரு பெயர் இசப்கோல். இந்த உமி பிளாண்டாகோ செடியின் விதைகளில் இருந்து எடுக்கப்படுகிறது. மலச் சிக்கலைப் போக்க சைலியம் உமி போன்ற நொதிக்காத கரையக்கூடிய நார்ச்சத்து சிறந்த வழி. ஏனென்றால் சைலியம் ஒரு சிறந்த மலமிளக்கியாகும். இது குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி, குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. மேலும் சைலியம் உமி பெருங்குடலைச் சுத்தம் செய்கிறது.
யோகா : செரிமான அமைப்பின் செயல்பாட்டை யோகா மேம்படுத்துகிறது மற்றும் மலம் அல்லது வாயுவை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது. எனவே வழக்கமான யோகாவில் ஈடுபடுவது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஒரு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ், தலையணை, நாற்காலி போன்ற தேவையானவற்றை பயன்படுத்தி ஆசனங்களை செய்யலாம். மலசனா, ஒட்டக போஸ் மற்றும் பவன்முக்தாசனம் போன்ற பல ஆசனங்கள் நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கிறது.
உணவு மற்றும் டயட் : நீங்கள் ஆரோக்கியமான குடல் வழக்கத்தை பெற விரும்பினால், உங்கள் டயட்டை அதற்கேற்ப மாற்றுவது மற்றும் உடல் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். தினசரி அதிக தண்ணீர் குடிக்க வேண்டும், உணவில் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும், மேலும் சமைக்காத (uncooked) பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆளி விதைகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுங்கள், மிளகாய் மற்றும் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் : நீங்கள் உட்கொள்ளும் காபி அல்லது ஆல்கஹால் அளவை குறைத்து அதற்குப் பதிலாக தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை அதிகரிக்கவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறைச்சி, பால் மற்றும் சீஸ் ஆகியவற்றைத் தவிர்த்து நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிககளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 20 - 35 கிராம் வரை நார்ச்சத்து எடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அதிக தண்ணீர் : நாள்பட்ட நீரிழப்பால் மலச்சிக்கல் ஏற்படலாம். எனவே மலச்சிக்கலை தவிர்க்க போதுமான தண்ணீர் குடிப்பது முக்கியம். உங்களை நீங்களே ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது உங்களது உள்ளுறுப்புகளை ஈரப்பதமாக வைப்பதோடு மலத்தை சரியாக வெளியேற்ற உதவும். சர்க்கரை இல்லாத கார்பனேற்றப்பட்ட தண்ணீரை (sparkling water) குடிப்பது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க கூடும்.