பெண்கள் பிறக்கும் போதே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முட்டைகளுடன் பிறக்கிறார்கள். வயது அதிகரிக்கும்போது கரு முட்டைகளின் அளவு மற்றும் தரம் இரண்டுமே குறைகிறது. ஆனால் கருவுறும் வாய்ப்பு குறைய பெண்கள் மட்டுமே காரணமல்ல குறைந்த விந்தணு எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் குறைந்த இயக்கமும் காரணம் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய உணவுகள்... பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த தருணத்தில் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது ஒரு சிறந்த யோசனை. ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை தவிர்க்க உதவுகிறது. ஜிங்க் போன்ற சத்துக்கள் விந்தணுக்களின் தரத்தை உயர்த்துகின்றன.
ஸ்ட்ரஸ் கூடாது: கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதில் மனஅழுத்தத்திற்கு முக்கிய பங்குண்டு. இயல்பாகவே மன அழுத்தம் பல நோய்களுக்கு காரணமாகும். பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் அவர்களின் ஹார்மோன்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சியை கட்டுப்படுத்தும் மூளையின் ஹைபோதாலமஸை பாதிக்கிறது. இதன் காரணமாக ஓவலேஷன் வழக்கத்தை விட தாமதமாகலாம். எனவே தினசரி யோகா, தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவது மன அழுத்தத்தில் இருந்து குறைக்கும். கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் மன அழுத்தம் இருப்பது வாய்ப்புகளை குறைக்கும்.
தவிர்க்க வேண்டும்: கர்ப்பமாக முயற்சிக்கும் பெண்கள் புகையிலை, ஆல்கஹால், அதிக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மது அருந்தும் பழக்கம் உடைய பெண்கள் கருத்தரிக்கும் முயற்சியில் இருந்தால் ஒருநாளைக்கு 2 டிரிங்க்ஸ் அளவுக்கு மேல் எடுக்க கூடாது. இல்லை என்றால் அவர்களின் ஈஸ்ட்ரோஜன் லெவல் மாறும் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறையும். டீ, காபி அதிகம் குடிக்க கூடாது. இந்த பழக்கமும் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைப்பதோடு ஓவலேஷனில் தாக்கத்தை ஏற்படுத்தி கருத்தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்.
உடலுறவுக்கு பின் விந்தணுக்கள் cervical mucus-யில் வேகமாக நுழைந்து இனப்பெருக்க அமைப்பு வழியாக செல்ல உதவுகிறது. மில்லியன் கணக்கான விந்தணுக்கள் கருப்பை வாயை அணுகினால் மட்டுமே கருத்தரிக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே உடலுறவின் போது வெவ்வேறு பொசிஷன்களை முயற்சிப்பதும், உடலுறவுக்கு பிறகும் விந்தணுக்கள் உள்ளே சரியாக செல்வதை உறுதி செய்ய கால்களை மேனோக்கியபடி உயர்த்தலாம்.
வழக்கமான உடலுறவு: கர்ப்பம் தரிக்க அதிக முறை உடலுறவு கொள்வதும் முக்கியம். ஆய்வுகளின்படி குறைந்தது ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே உடலுறவை கடமை அல்லது வேலையாக கருதாமல் சுவாரஸ்யமாக ஈடுபடுங்கள். 30-களில் கருத்தரிக்க முயற்சிக்கும் போது முட்டையின் தரம் மற்றும் அளவு குறைவதால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 30-களில் உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முயற்சிகளில் இருக்கும் போது மன அழுத்தத்தை அனுபவிப்பதை பல மருத்துர்கள் கவனிக்கின்றனர்.
6 மாதங்களுக்கு மேல்.. 6 மாதங்கள் முயற்சித்த பிறகும்கருத்தரிக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவ ஆலோசனை அவசியம். பிசிஓஎஸ், ஹார்மோன் பிரச்சனைகள், ஆரம்பகால மெனோபாஸ், ஃபலோபியன் குழாய் அடைப்பு அல்லது கருப்பையில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் போன்றவை காரணமாக, சில பெண்களுக்கு கருமுட்டை வெளிவர தவறும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் கருவுறுதலை பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பை நார்த்திசுக்கட்டி பிரச்சனைகள் மிக பொதுவானது. ஆண்களுக்கும் விந்து தரம் உள்ளிட்ட சில சிக்கல்கள் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.