அரிசியில் காணப்படும் அதிக அளவு ஸ்டார்ச் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் சிலர். வாழ்க்கை முறை நோய்களில் இருந்து தப்பிக்க குறிப்பாக வெள்ளை அரிசி தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். அதே நேரம் பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி மற்றும் குயினோவா போன்றவற்றை ஆரோக்கிய மாற்றாக குறிப்பிடுகிறார்கள்.
இந்த பட்டியலில் Black rice எனப்படும் கருப்பு அரசியும் உள்ளது. இது பொதுவாக forbidden rice அதாவது தடைசெய்யப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட அரிசி என குறிப்பிடப்படுகிறது. இதற்கு காரணம் பழங்காலத்தில் சில உயரடுக்கு மக்களுக்காக மட்டுமே இது பயிரிடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. கருப்பு அரிசி வழக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் இங்கே...
நீரிழிவு அபாயத்தை தடுக்கிறது: வெள்ளை அரிசி நுகர்வு மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டான நீரிழிவு அபாயத்திலிருந்து நம்மை காக்கிறது கருப்பு அரசி. ஏனெனில் கருப்பு அரிசியில் ஃபைபர் நிறைந்துள்ளது, இது உடலில் சீரான சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது ரத்தத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிட உதவுகிறது, இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
இதய ஆரோக்கியம்: உங்கள் டயட்டில் கருப்பு அரிசி சேர்ப்பது என்பது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவுகளில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கருப்பு அரிசியில் காணப்படும் அந்தோசயனின் பைட்டோ கெமிக்கல்கள் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ-புரோட்டீன் (LDL) கொலஸ்ட்ராலை குறைக்கிறது. தவிர பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியையும் கருப்பு அரிசி வெகுவாக குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடல் ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு: ஒரு அரை கப் கருப்பு அரிசியில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து (ஃபைபர்) உள்ளது. எனவே டயட்டில் இதை சேர்ப்பது குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றை தடுக்கிறது. மேலும் கருப்பு அரிசி புரதம் மற்றும் நார்ச்சத்துக்ளின் நல்ல மூலமாக இருப்பதால் அதிக பசியை குறைப்பதன் மூலம், நிறைவான உணர்வை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவும்.
கண் ஆரோக்கியம்: கருப்பு அரிசியில் அதிக அளவு lutein மற்றும் zeaxanthin உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய 2 வகையான கரோட்டினாய்டுகள் ஆகும். கருப்பு அரிசியில் காணப்படும் இந்த சேர்மங்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக வேலை செய்து, கண்களை சேதப்படுத்த கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கருப்பு அரிசியில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் கண்களில் UV கதிர்வீச்சின் தாக்கத்தையும் குறைக்கிறது.