முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

ஆன்லைன் வாயிலாகவும் மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்ளும் சூழல் இருப்பதால், எவ்வித சுகாதார நிபுணர்களின் ஆலோசனை இன்றி மருத்துக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறு என்கிறார் மருத்துவர் ஜடேஜா.

 • 16

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தினாலும் சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். எனவே இந்நேரத்தில் கருத்தடை மாத்திரைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எப்படி செயல்படுகிறது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பது குறித்து மகப்பேறியல் மருத்துவர் யுவராஜ்சிங் ஜடேஜா என்ன சொல்கிறார்? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 26

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும் முறை: தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டாலும் சில நேரங்களில் குழந்தை வேண்டாம் என்று நினைப்பதுண்டு. இந்த சூழலில் உடலுறவில் ஈடுபட்ட 5 நாட்களுக்குள் நீங்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுவரை வாய்வழி கருத்தடை மாத்திரைகள் தான் மக்களிடம் பிரபலமாகியுள்ளது என்கிறார் பிரபல மகப்பேறியல் மருத்துவர் ஜடேஜா. இதை உட்கொள்ளும் போது, செயற்கை ஹார்மோன்கள், விந்தணுக்கள், கருப்பை அடைவதைத் தடுக்கிறது. இவ்வாறு பயன்படுத்தும் 90 சதவீத மக்களுக்கு இந்த மாத்திரை நல்ல பலனளிக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 36

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  கருத்தடை மாத்திரை பயன்பாட்டின் போது செய்யும் தவறுகள்: இன்றைக்கு 24 மணிநேரமும் மருந்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படுவதால் எந்த நேரத்திலும் நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிக்கொள்ள முடியும். இதோடு மட்டுமின்றி ஆன்லைன் வாயிலாகவும் மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொள்ளும் சூழல் இருப்பதால், எவ்வித சுகாதார நிபுணர்களின் ஆலோசனை இன்றி மருத்துக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறு என்கிறார் மருத்துவர் ஜடேஜா. ஆம் நீங்கள் முறையான கருத்தடை செய்ய திட்டமிருந்தால் முதலில் முழுமையான சோதனை செய்ய வேண்டும். பின்னர் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் நீங்கள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

  MORE
  GALLERIES

 • 46

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  மாத்திரைகளை நீங்கள் உங்கள் இஷ்டத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகள் உங்களுக்கு பலனளிக்க வேண்டும் என்றால் ஒரே நேரத்தில் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை விட்டு, மாத்திரைகளைத் தவிர்ப்பது அல்லது வெவ்வேறு நேரங்களில் அவற்றை உட்கொள்வது உங்களுக்கு கர்ப்பத்தின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக நீங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் 5 நாள்களில் அல்லது சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலின் படி, கருத்தடை மாத்திரைகளைத் தொடங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  “ஆன்டிபயாடிக்குகள் மற்றும் வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் போன்ற சில மருந்துகள் கருத்தடை மாத்திரைகளின் செயல்திறனில் தலையிடலாம். எனவே எந்தவொரு புதிய மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன், சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 66

  கருத்தடை மாத்திரைகளுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க..!

  பக்க விளைவுகள்: "கருத்தடை மாத்திரைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, குமட்டல், தலைவலி மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒருவேளை இதுப்போன்ற பக்க விளைவுகள் நீடித்தால் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES