முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

இந்த ஒர்கவுட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை செய்ய உங்களுக்கு எந்த உபகரணங்களும் தேவை இல்லை.

 • 16

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வயிற்று பகுதியில் இருக்கும் தொப்பையை குறைப்பது உண்மையில் சவாலான விஷயமாக இருக்கிறது. உடலின் பல பகுதியில் இருக்கும் சதை குறைந்தாலும் தொப்பையை கரைக்க நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  வீட்டில் அல்லது ஜிம்மில் எங்கு நீங்கள் வொர்க் அவுட் செய்தாலும் தொப்பையை குறைக்கும் அளவிற்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி உள்ளது. அந்த ஒர்கவுட்டிற்கு பெயர் பைசைக்கிள் க்ரன்ச் (bicycle crunch). தரையில் படுத்து கொண்டு தலையை தூக்கி இரு கைகளையும் தலைக்கு பின்னால் வைத்து கொண்டு வலது காலை மடக்கி மார்பு அருகே கொண்டு வரும் போது, இடது முழங்கையை முன்னோக்கி கொண்டு வர வேண்டும். பின் இடது காலை தூக்கும் போது தலைக்கு பின்னால் இருக்கும் வலது முழங்கையை முன்னோக்கி கொண்டு வர வேண்டும். இதை வேகமாக செய்தால் சைக்கிளை மிதிப்பது போல இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 36

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  bicycle crunch ஒர்கவுட் செய்யும் போது உடலின் அடிவயிற்றுப் பகுதி மற்றும் முக்கிய தசைகளில் ஆற்றல் முழுவதும் குவிக்கப்படும். எனவே நீண்ட நாட்களாக குறையாத தொப்பை கூட மெல்ல மெல்ல குறைய துவங்கும். இந்த ஒர்கவுட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனை செய்ய உங்களுக்கு எந்த உபகரணங்களும் தேவை இல்லை. நீங்கள் இந்த ஒர்கவுட்டை புதிதாக செய்ய போகிறீர்கள் என்றால் எந்த உபகரணங்களும் இல்லாமல் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  நீங்கள் ஏற்கனவே இந்த ஒர்கவுட்டை செய்து கொண்டிருப்பவர் என்றால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று சிறந்த பலன்களை பெற கைகளில் தம்பிள்ஸ் வைத்து செய்யலாம். 2.5 கிலோ எடை கொண்ட தம்பிள்ஸ் தொடங்கி படிப்படியாக முன்னேறலாம். ஆனால், தம்பிள்ஸ் வைத்து கொண்டு சைக்கிள் க்ரன்ச் செய்ய வேண்டும் என்பதற்கு அவசரம் காட்டாதீர்கள். முதலில் உங்கள் உடல் சாதாரண சைக்கிள் க்ரன்ச் ஒர்கவுட்டிற்கு நன்கு பழகட்டும். சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து படிப்படியாக வெயிட் வைத்து செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  நீங்கள் தம்பிள்ஸை சைக்கிள் க்ரன்ச் செட்டில் சேர்க்கும் போது, ​​அது ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் மற்றும் கார்டியோவின் நல்ல கலவையாகும். இந்த கலவை ஒர்கவுட் மூலம் உங்கள் வயிற்று பகுதியில் கவனம் செலுத்தும் போது அது உங்கள் முழு உடலுக்கும் பயனளிக்கும். அதே சமயம் நீங்கள் ஒரே மாதிரியான உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் 50 சைக்கிள் க்ரன்ச்ஸ்களை செய்து பின் வேறு வொர்க்அவுட் செய்தால் க்ரன்ச்ஸின் செயல்திறன் சற்று சந்தேகத்திற்குரியதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  கடினமாக முயற்சி செய்தும் தொப்பை குறையவில்லையா...? இதை ட்ரை பண்ணி பாருங்க..!

  எனவே தொப்பையை குறைக்க நீங்கள் செய்ய வேண்டியது சைக்கிள் க்ரன்ச் ஒர்கவுட்டை செட்களாக பிரித்து செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு செட்டில் 20 சைக்கிள் க்ரன்ச்ஸ்களை செய்து இடையில் 10 வினாடி ஓய்வெடுத்து கொள்ளுங்கள். இதே போல 10 வினாடி ஓய்வுடன் 3 அல்லது 4 செட் உங்களால் முடிந்த வேகத்தில் செய்யலாம். சைக்கிள் க்ரன்ச்கள் தொப்பையை குறைக்க உதவுவதோடு உடலின் ஒட்டுமொத்த தோரணையை மேம்படுத்துகிறது. அதே போல மற்றொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் தொப்பையை குறைப்பது வெறுமனே உடற்பயிற்சியை சார்ந்தது மட்டுமல்ல சீரான டயட்டும் இதில் அடங்கும். எனவே எடையை குறைக்க உதவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை டயட்டில் சேர்த்து அதோடு சைக்கிள் க்ரன்ச் செட்களையும் உங்கள் வழக்கத்தில் சேருங்கள்.

  MORE
  GALLERIES