இன்றைய கொரோனா நெருக்கடி காலத்தில் வீட்டிலேயே பணிபுரிபவர்கள் உடலுக்கு எந்த ஒரு வேலையையும் கொடுக்காமல் உட்கார்ந்த நிலையிலேயே பல மணி நேரங்கள் இருப்பதால் அதிகரித்த உடல் எடை மற்றும் உடல் பருமன், தொப்பை கொழுப்பு போன்ற எடை சார்ந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜிம்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உடல் எடையை குறைக்கும் வகையில் இந்திய பாரம்பரிய டயட்டுகளுக்கு மக்கள் தங்கள் உணவு முறையை மாற்றி வருகின்றனர்.
அதிகரித்த எடையை குறைக்க குறைந்த கலோரி கொண்ட சத்தான உணவு வகைகளுக்கு பெரும்பாலான மக்கள் மாறிவரும் நிலை ஒருபக்கம் இருந்தாலும், மிக ஒல்லியான தோற்றத்தை கொண்டிருக்கும் மக்கள் பலர் தங்கள் எடையை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். நம் சமூகத்தில் அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஒல்லியான தோற்றத்தை மாற்றுவதிலும், குறைந்த எடை கொண்டவர்கள் தங்கள் தசைகளை ஆரோக்கியமான வழியில் வலுப்படுத்திக் கொள்வதிலும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
எடை அதிகரிப்பது அல்லது உங்கள் உடலில் தசை அடர்த்தியை அதிகரிப்பது ஒன்றும் உடல் எடையை குறைப்பது போல எளிதான காரியம் அல்ல. இருப்பினும், உங்கள் தினசரி உணவில் சில உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான முறையில் திறம்பட உங்கள் எடையை அதிகரிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க அல்லது ஆரோக்கியமாக தசையை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு வகைகள் குறித்து பின்வருமாறு காண்போம்.
உருளைக்கிழங்கு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவு: உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. தினமும் ஆரோக்கியமான மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கு : மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவு: உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. தினமும் ஆரோக்கியமான மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.