முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

முடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்று. அந்தவகையில், இயற்கையாக உங்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த சிறந்த உணவுகள் பற்றி காணலாம்.

  • 19

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    ஆண், பெண் என அனைவரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று முடி உதிர்வு. ஊட்டச்சத்து குறைபாடு, மன உளைச்சல், உணவு முறை போன்ற பல வித காரணங்களால் தலைமுடி உதிர்வு பிரச்னை ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள் பற்றி இங்கு காணலாம்.

    MORE
    GALLERIES

  • 29

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    ஆளி விதை : ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதை இறந்த முடி வேர் கால்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த ஆளி விதைகளை நம் உணவில் தினம் சேர்த்துக்கொள்ள முடி உதிர்வு பிரச்சனை குறையும்.

    MORE
    GALLERIES

  • 39

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    வால்நட்ஸ் : புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் சிறந்த மூலமாக வால்நட்ஸ் உள்ளது. மேலும், கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் ஃபோலேட் உள்ளடக்கமும் இதில் காணப்படுகிறது. எனவே, தினமும் 2-3 வால்நட்ஸினை ஊறவைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 49

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    முட்டை : பயோட்டின் மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக முட்டைகள் உள்ளன. முட்டையில் காணப்படும் இந்த கலவைகள் ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலுக்கு உதவுவதோடு முடி உதிர்வு பிரச்னையையும் தடுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    முழு நெல்லிக்காய் : வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் கூந்தல் உதிர்வை தடுக்கும் ஒரு முக்கிய உணவு பொருளாக உள்ளது. மேலும் இந்த நெல்லிக்காயில் காணப்படும் இரும்புச்சத்து தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 69

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு : ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் பயோட்டினின் சிறந்த மூலமாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு (Sweet Potato) உள்ளது. இந்த சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை உணவில் சேர்த்துக்கொள்ள முடி உதிர்வு குறையும்.

    MORE
    GALLERIES

  • 79

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    பசலைக் கீரை : இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாக பசலைக் கீரை உள்ளது. மேலும் இதில் காணப்படும் ஒமேகா-3 அமிலங்கள் உச்சந்தலை ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    பீன்ஸ் : பீன்ஸ் வகைகள் பொதுவாக புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவு பொருட்களாக காணப்படுகின்றன. பீன்ஸ்களில் காணப்படும் இந்த சேர்மங்கள் கூந்தல் உதிர்வை தடுப்பதோடு, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    இயற்கையாக முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்க...!

    சூரிய காந்தி விதைகள் : சுவைமிக்க சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, வைட்டமின் இ, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் உள்ளிட்ட கூந்தல் உதிர்வை குறைக்கும் சத்துக்கள் காணப்படுகின்றன.

    MORE
    GALLERIES