எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரவர் சூழ்நிலை மற்றும் சாதக பாதகங்கள் ஆகியவற்றை பொறுத்து நபருக்கு நபர் மாறும். ஆனால் ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் உடல் அளவிலும், மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் நீங்கள் அதற்கு சரியான வலுவான நிலையில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
20 வயதிற்கு முன் : பதின்ம பருவத்தில் இருக்கும்போது குழந்தை பெற்றுக் கொள்வது என்பது சரியாக இருக்காது. ஏனெனில் உடல் ரீதியாக சரியாக இருந்தாலும் மனரீதியாக நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு தயாராக இருப்பீர்களா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்று. அதே சமயம் பெரும்பாலோனோர் இந்த வயதில் பொருளாதார ரீதியாகவும் வலுவான நிலையை அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
20-24 : இருபதில் இருந்து 24 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு மகப்பேறுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் அவர்கள் கர்ப்பமாவதற்கான வாய்ப்பு 25% இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் பொருளாதார ரீதியாக நீங்கள் இன்னும் வலுவான நிலையை அடையவில்லை எனில் குழந்தை பிறந்ததற்கு பின் சில சவால்களை சந்திக்க வேண்டிய நிலை வரலாம்.
25-27 : 20 வயதில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் 27 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் ஏற்பட்டு விடாது. உங்களது மகப்பேறுக்கான வாய்ப்புகள் அப்படியே தான் இருக்கும். ஆனால் மனமுதிர்ச்சி, பொறுமை, பொருளாதார நிலை ஆகியவற்றை பார்க்கும் போது 27 வயதில் நீங்கள் ஒரு நல்ல நிலையில் இருப்பீர்கள். இந்த வயதில் நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால் அது நல்ல அணுகு முறையாகவே இருக்கும்.
30-34 : 30 வயதை நெருங்கிய உடனோ அல்லது 35 வயதிற்கு பிறகோ உங்கள் மகபேருக்கான வாய்ப்புகள் மெதுவாக குறைய துவங்குகின்றன. ஆனால் இந்த வயதிலும் உங்களுக்கான சரியான வாழ்க்கை துணை கிடைக்காமலும், பொருளாதார ரீதியாக வலுவான நிலையை அடையாமலும் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அவசரப்படுவது கூடாது. நீங்கள் எவ்வளவு தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களது இளமைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கவும் உங்கள் வேலை, தொழில் ஆகியவற்றை விருத்தி செய்து கொள்ளவும் முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.
40-45 : வல்லுனர்களின் கருத்துப்படி 40 வயதிற்கு பிறகு பெண்களின் மகப்பெருக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு மாதமும் 5% -க்கும் குறைவாக உள்ளதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 40 வயதிற்கு மேல் கர்ப்பம் அடையும்போது உடல்நிலை காரணமாக தானாகவே கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகின்றனர். இதைத் தவிர வேறு பல உடல் ரீதியான உபாதைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.