பொதுவாக கர்ப்ப காலத்திற்கு பிறகு பெண்களின் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று தான் உடல் எடை கூடுதல். பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை மிக விரைவிலேயே அதிகரித்து விடும். அதே போன்று பிரவத்திற்கு பிறகும் இந்த எடை கூடுதல் பிரச்சனை தொடர கூடும். குறிப்பாக வயிற்று பகுதியில் அதிக கொழுப்புகள் சேர்ந்தது போன்று உப்பசமாக இருக்கும். இதை குறைப்பதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக இந்த பதிவில் கூறப்படும் 5 உடற்பயிற்சிகளை செய்து வந்தால் போதும்.
V வடிவ பயிற்சி : V வடிவ பயிற்சி என்பதை வி-அப் என்று சொல்வார்கள். இது உங்கள் உடலின் மைய பகுதி, கால்கள், முதுகு மற்றும் தோள்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இந்த உடற்பயிற்சியானது தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது க்ரஞ்ச்ஸ் மற்றும் லெக் ரைசஸ் என பயிற்சிகளை கொண்டது. கர்ப்பத்திற்குப் பிறகு தொப்பை கொழுப்பை குறைக்க, இந்தப் பயிற்சியானது உங்கள் தினசரி வொர்க் அவுட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பிளாங்க் : தொப்பையில் உள்ள கொழுப்பை குறைக்க பிளாங்க் பயிற்சி மிகவும் உதவும். இந்த உடற்பயிற்சியில் ஒரே நேரத்தில் பல தசைகளை ஈடுபடுத்துவதால், அதிக கலோரிகளை இழக்க முடியும். இது உங்கள் உடலை பலப்படுத்துவதோடு, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீங்கள் ஸ்ட்ரைட் ஆர்ம் பிளாங்க், சைடு பிளாங்க் மற்றும் ஒரு கை பிளாங் போன்ற பல்வேறு பிளாங்க் பயிற்சிகளையும் செய்யலாம். இது நல்ல மாற்றத்தை தரும்.
பைசைக்கிள் கிரன்ச்சஸ் : சைக்கிள் கிரன்ச் உங்கள் மேல் வயிற்று தசைகளை உருவாக்க உதவுகிறது. உடற்பயிற்சி சரியாகவும் ஒழுங்காகவும் செய்யும்போது ஒரு தட்டையான வயிற்றைப் பெற முடியும். இந்த உடற்பயிற்சி செய்வதற்கு சிறிது கடினமாகத் தோன்றலாம், ஆனால் இதை சரியாக தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் நினைத்தபடி தொப்பையில் உள்ள கொழுப்பு குறைந்து, ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஃப்ளட்டர் கிக்ஸ் : ஃப்ளட்டர் கிக்ஸ் என்பது உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள கூடுதல் கொழுப்பை குறைக்க கூடிய சிறந்த பயிற்சியாகும். பிரசவத்திற்கு பிறகு கூடியுள்ள வயிற்று கொழுப்பை இந்த பயிற்சியை பயன்படுத்தி வேகமாக குறைக்கலாம். மற்ற பயிற்சிகளை போன்றே இதையும் தினசரி செய்து வரவேண்டும். இந்த பயிற்சி ஆரம்பத்தில் கடினமாக இருப்பது போன்று தோன்றும், இருப்பினும் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்.
மவுன்டெயின் கிளிம்பர்ஸ் : மலை ஏறுபவர்கள் போன்ற வடிவத்தை கொண்டது தான் இந்த பயிற்சி. இது ஒரு எளிதான உடற்பயிற்சி போல் தோன்றலாம், ஆனால் இது உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை எளிதாக கரைக்க உதவும். இந்த உடற்பயிற்சியானது உங்கள் வயிறு, கைகள், தோள்கள், மார்பு மற்றும் தொப்பை ஆகிய பகுதியை வலுவாக்குவதோடு, கொழுப்பையும் குறைக்கும். இது கிட்டத்தட்ட ஒரு கார்டியோ பயிற்சியை போன்றது தான்.