இன்றைக்கு பெரும்பாலான மக்கள் இணையத்தில் அதிகம் தேடும் வார்த்தைகள் என்றால் உடல் எடையை எப்படி குறைப்பது? என்னென்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்? என்பது தான். ஆம் குறிப்பாக கொரோனா தொற்று காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதால், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது, தேவையற்ற ஸ்நாக்ஸ்களைச் சாப்பிடுவது போன்றவற்றால் உடல் எடை அதிகரித்துள்ளது.இதனால் ஜிம்மிற்கு செல்வது தொடங்கி டயட்டில் இருப்பது போன்றவற்றை மக்கள் மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக ஒவ்வொருவரும் புரதம் நிறைந்த உணவுகள், வாழைப்பழங்கள், நட்ஸ் போன்றவற்றை உள்கொண்டால் நல்ல பலன் அளிக்கும் என்பதால் அதனை அதிகம் மக்கள் உட்கொள்ளவார்கள் என்பதைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக, ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டால், உங்களுக்கு அதிக பலனை கொடுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.உப்பு சாப்பிட்டால்.. உடற்பயிற்சி செய்யும் போது அதிக எனர்ஜி கிடைக்கிறது என்று நம்ப முடியவில்லையா? வாங்க இதுக்குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்தது குறித்து விரிவாக இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தசைப்பிடிப்புகளைத் தடுக்க உதவுவதல்:
பொதுவாக தீவிர உடற்பயிற்சி செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உடற்பயிற்சி செய்வதற்கு பின்னதாக தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலிகள் அதிகளவில் ஏற்படுவதை நாம் உணர்வோம். எனவே ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிட்டால் இப்பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் தடுக்கலாம்.
பொதுவாக உப்பில் அயோடின்,பாஸ்பரஸ், சோடியம் குளோரைடு, மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகளிவில் உள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக உப்பு சாப்பிடுவதால் நிச்சயம் உடல் ஆரோக்கியத்துடனுன் இருக்கும் என்பதால் நீங்களும் மறக்காமல் முயற்சித்து பாருங்கள் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.