தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது. அதுவும் நகர் புறங்களில் இருக்கும் ஓட்டல்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம். நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும்.
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைக்க வேண்டும். இதனால் ரணங்கள் சீக்கிரம் ஆறும். கிருமிகளின் தாக்கமும் இருக்காது. வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரைப் பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.