ஆனால் உடற்பயிற்சியாளர்கள் உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் என இரு முறையும் குளிப்பது நல்லது என்கின்றனர். ஆம், அதாவது உடற்பயிற்சிக்கு முன் குளிப்பதால் வியர்வை துர்நாற்றம் அதிகமாக இருக்காது. அதேபோல் குளிக்காமல் செல்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் சருமத் துகள்களை அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்வை சீராக வெளியேறாது. அவ்வாறு வெளியேறினாலும் சருமத்தில் உள்ள அழுக்கும் உப்பு கலந்த வியர்வையும் சேர்ந்து சருமத்தில் அரிப்பு, அலர்ஜி என பாதிக்கச் செய்யும். உடற்பயிற்சி செய்வதற்கும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.