முகப்பு » புகைப்பட செய்தி » “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

“சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

குளியல் என்பது உங்கள் உடம்பில் உள்ள அழுக்கை மட்டும் நீக்க அல்ல. உங்கள் உடம்பில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்கும் அற்புதமான ஒன்றாகும்.

 • 16

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  ஒரு மனிதனுக்கு அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் துவங்க குளியல் மிக அவசியம். முக்கியமும் கூட. குளியல் என்பது உங்கள் உடம்பில் உள்ள அழுக்கை மட்டும் நீக்க அல்ல. உங்கள் உடம்பில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்கும் அற்புதமான ஒன்றாகும். அந்த வகையில், நீங்கள் செய்யும் மிகவும் பொதுவான குளியல் தவறுகள் மற்றும் அவற்றைத் தீர்க்க விரைவான வழிகள் இங்கே...

  MORE
  GALLERIES

 • 26

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  நீண்ட நேர குளியல்: நீண்ட நேர குளியல் உங்கள் உடம்பில் உள்ள அழுக்கை அகற்றும். ஆனால், அதனுடன் உங்கள் சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய்களையும் அகற்றிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? இவை இயற்கையான மாய்ஸ்சரைசர்களை அகற்றுவதால் உங்கள் சருமம் வறட்சியாகவோ, வெளிர் நிறமாகவோ மாறக்கூடும். ஒரு ஆரோக்கியமான குளியல் 10 நிமிடங்கள் மட்டுமே நீடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 36

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  சூடான நீரில் குளியல்: குளிர்காலங்களில் நம்மில் பெரும்பாலானோர் சூடான நீரையே குளிப்பதற்கு விரும்புகிறோம். ஆனால் சூடான நீர் சருமத்திற்கு நல்லதல்ல. இது நம் உடலில் இரத்தத்தின் மேற்பரப்பில் விரைந்து சென்று வீக்கத்தைத் தூண்டும். மாறாக, வெதுவெதுப்பான நீரின் குளிப்பது சிறந்தது. அப்படியிருந்தும், நீங்கள் 10 நிமிடங்கள் மட்டுமே குளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  சருமத்தின் மீது நகத்தை வைத்து தேய்த்தல்: பெரும்பாலும், நாம் குளிக்கும் போது தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்கு எதிரிகளாகிவிடுகிறோம். தலைக்கு குளிக்கும்போது நம் விரல் நகங்களை பயன்படுத்தி தேய்க்கிறோம். அது தவறானது. மேலும், சிலர் உடம்பில் உள்ள அழுக்கை ஆக்ரோஷமாக தேய்த்து சுத்தம் செய்வார்கள். அதை முதலில் நிறுத்த வேண்டும். இல்லாவிடில் உடம்பில் ஆங்காங்கே சிவந்து இருத்தல், தடிப்புகள் மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். ஆகவே, ஒருவர் குளிக்கும் போது தெளிவுடன் குளிக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  சோப்பு: நீங்கள் பயன்படுத்தும் சோப்பு குறித்து முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய தயாரிப்புகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, நம் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, ஆர்கானிக் முறையில் தயாராகும் பாடி வாஷ் பிராண்ட்களை வாங்கி பயன்படுத்துவது சருமத்திற்கு மென்மையாகவும் இருக்கும், தீங்கும் விளைவிக்காது. அதேபோல் உங்கள் தலைமுடிக்கும் ஆர்கானிக் ஷேம்பு பிராண்ட்களை வாங்கி உபயோகிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  “சுடுதண்ணீர் முதல் சோப்பு வரை…” - நீங்கள் செய்யக்கூடாத 5 குளியல் தவறுகள்!

  மென்மையான டவல்: உங்கள் தலைமுடியை எத்தனை முறை சுத்தப்படுத்துகிறீர்கள் என்பதையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். உங்கள் தலைமுடி உடையக்கூடியதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் சுத்தம் செய்ய வேண்டாம். இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்தி கூந்தலை பராமரித்தால் வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியை சுத்தம் செய்தால் போதும். ஆனால், உங்கள் தலைமுடியை சுத்தம் செய்தவுடன், அதை உங்கள் துண்டை கொண்டு ஆக்ரோஷமாக அழுத்தி தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, மென்மையான மைக்ரோ ஃபைபர் டவலைப் பயன்படுத்துங்கள். அவை உங்கள் கூந்தலில் இருந்து சரியான ஈரப்பதத்தை சேதப்படுத்தாமல் உறிஞ்சிவிடும். எனவே, உங்கள் கூந்தலும் உதிராமல் பாதுகாக்கப்படும்.

  MORE
  GALLERIES