பெண்ணுறுப்புக்கு சொல்யூஷன் பயன்படுத்தக் கூடாது : பெண்ணுறுப்பை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் சில பெண்கள் சோப்பு, சொல்யூஷன் மற்றும் சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால் பெண்ணுறுப்பு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதற்கான நல்ல பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். நீங்கள் பயன்படுத்தும் ரசாயனங்களால் அந்த பாக்டீரியா இறக்கும் பட்சத்தில் தொற்றுகள் ஏற்படலாம்.
பொம்மைகளை (Sex Toys) சுத்தம் செய்யவும் : வேடிக்கை நிறைந்த தாம்பத்திய வாழ்க்கை வாழ விரும்பும் தம்பதிகள் பாலியல் உறுப்புகளைப் போன்ற பொம்மைகளை (sex toys) பயன்படுத்துகின்றனர். நீங்கள் அவற்றை பயன்படுத்தாவிட்டால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஒருவேளை பயன்படுத்தும் பட்சத்தில் அவற்றை முறையாக சுத்தம் செய்யவும்.
ஆணுறையை மாற்றவும் : ஒரே இரவில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பாலியல் உறவு வைத்துக் கொள்ள சில தம்பதிகள் விரும்புகின்றனர். அதேபோல ஒரே சமயத்தில் பெண்ணுறுப்பு வழி புணர்ச்சி மற்றும் ஆசனவாய் விழி புணர்ச்சி அல்லது வாய்வழி புணர்ச்சி என வெவ்வேறு உத்திகளை முயற்சிக்க தம்பதிகள் விரும்புகின்றனர். இது போன்ற சமயங்களில் தொற்றுகளை தடுக்க ஆணுறையை மாற்றவும்.