முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் எளிதில் தொற்றுகள் உண்டாகும். இவர்களுக்கு பருக்கள் உண்டாக்கும் போது சில நேரங்களில் அவை சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளை உண்டாக்குகின்றன. ஆனாலும் அவற்றில் சீழ் போன்ற எதுவும் ஏற்படாது.

 • 17

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  பொதுவாக பதின்ம வயதில் உள்ளவர்களுக்கும் இளம் வயதில் இருப்போருக்கும் முகப்பரு பிரச்சனை ஏற்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று. அந்த சமயத்தில் உடலில் ஏற்படும் சில ஹார்மோன் மாற்றங்களினாலும், வேதி வினைகளினாலும் முகப்பருக்கள் உண்டாகின்றன.

  MORE
  GALLERIES

 • 27

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  ஆனால் குழந்தைகளுக்கும் முகப்பரு உண்டானால் என்ன செய்வது? குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படும். இது மருத்துவ ரீதியாக நியோனாடல் செஃபாலிக் புஸ்டுலோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் குழந்தைகளுக்கு உண்டாகும் இந்த பிரச்சனைக்கான காரணத்தை பற்றி சரியான விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஏதேனும் தொற்று அல்லது பாக்டீரியாவினால் இது உண்டாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  ஆரம்பத்தில் சிறிய சிகப்பு நிற கட்டிகளை போல் கன்னங்களிலும் கைகளிலும் உருவாகும் இதிலிருந்து சீழ் எதுவும் வெளிப்படாது. உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு உண்டாகும் இந்த முகப்பருவானது பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். சில நேரங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ உதவி தேவைப்படலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  ஐந்தில் ஒரு குழந்தைக்கு இந்த முகப்பரு பிரச்சனை இருப்பதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக பிறந்து 2-12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளில் இது அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை உடலுக்கு மிகப் பெரும் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தா விட்டாலும், இதனால் ஏற்படும் அறிகுறிகளை அலட்சியமாக கருதி அப்படியே விட்டுவிட்டால் பிகாலங்களில் மிகபெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 57

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  சிவப்பு நிற தடிப்புகள் : பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாகவும் எளிதில் தொற்றுகள் உண்டாகும். இவர்களுக்கு பருக்கள் உண்டாக்கும் போது சில நேரங்களில் அவை சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளை உண்டாக்குகின்றன. ஆனாலும் அவற்றில் சீழ் போன்ற எதுவும் ஏற்படாது. பெரும்பாலும் இவை தாமாகவே குணமாகிவிடும்.

  MORE
  GALLERIES

 • 67

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  சிவந்த கண்ணங்கள் : முகப்பரு உண்டாகி இருந்தால் கன்னங்கள் சிவந்த நிறத்தில் காணப்படலாம். அவற்றில் கட்டிகள் ஏதும் இல்லாமல் இருந்தாலும், சருமம் மட்டும் சிவந்த நிறத்தில் மாறிவிடக்கூடும். இவ்வாறு உங்கள் குழந்தைக்கு இருப்பது தெரியவந்தால் அதனை அலட்சியபடுத்தமல் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 77

  குழந்தைகளுக்கும் முகப்பரு ஏற்படுமா..? அறிகுறிகளும் காரணங்களும்..!

  ஒவ்வாமை : குழந்தைகளுக்கு முகப்பரு உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஒவ்வாமை மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இது முறையற்ற சரும பராமரிப்பினாலோ அல்லது குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம்குறைவாக இருப்பதினாலோ ஒவ்வாமை ஏற்படலாம். இந்த ஒவ்வாமையினால் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். பாக்டீரியாக்கள் மற்றும் தொற்றுக்களின் மூலமே குழந்தைகளுக்கு இது போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. இந்த சமயங்களில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் நல்லது.

  MORE
  GALLERIES