ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

பொதுவாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகள் எப்போதுமே மிக மிக பாதுகாப்பானவை தான். ஆனால் பல ஆயுர்வேத சிகிச்சையகங்களில் முறையான செயல் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகளில் பெரும்பாலும் ஆர்சனிக் எனப்படும் பாஷாணங்கம், பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற ஐயம் உண்டாகிறது.

 • 17

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  அலோபதி மருத்துவம் அதிக அளவில் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில், பலர் இன்னும் கூட பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை பின்பற்றி வருகின்றனர். அலோபதி மருத்துவத்தில் அளிக்கப்படும் மருந்துகளினால் அதிக அளவு பக்க விளைவுகள் ஏற்படுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 27

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் இயற்கையான முறையில் மூலிகைகளைக் கொண்டு மருந்துகளை தயாரித்து மக்களின் நோயை தீர்க்க உதவுகிறது. மேலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வதால் அலோபதி மருத்துவத்தின் அளவு இதில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்பதும் முக்கிய காரணம் ஆகும். அதே சமயத்தில் குழந்தைகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் உகந்ததா என்ற கேள்வி எழுவதையும் நம்மால் தவிர்க்க முடிவதில்லை ஏனெனில் சில மருத்துவ முறைகள் குழந்தைகளின் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இதைப் பற்றி அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவரிடம் பேசியபோது சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

  MORE
  GALLERIES

 • 37

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  பொதுவாக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறைகள் எப்போதுமே மிக மிக பாதுகாப்பானவை தான். ஆனால் பல ஆயுர்வேத சிகிச்சையகங்களில் முறையான செயல் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுவதில்லை. ஆயுர்வேத மருத்துவத்தில் சிகிச்சைக்கு அளிக்கப்படும் மருந்துகளில் பெரும்பாலும் ஆர்சனிக் எனப்படும் பாஷாணங்கம், பாதரசம், ஈயம் போன்ற உலோகங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற ஐயம் உண்டாகிறது. எனவே ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்வதற்கு முன் முறையான அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவ்வாறு மருத்துவரின் அனுமதி பெற்ற பின் தாராளமாக குழந்தைகளுக்கு ஆயுர்வேத மருந்து பொருட்களை கொடுக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் : ஆயுர்வேத மருத்துவம் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் அலோபதி மருத்துவத்தில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. அலோபதி மருத்துவமானது ஒரு நோய் ஏற்பட்டால் அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது இதனால் நோய் நாளடைவில் முற்றிப் போய் விடுகிறது. இதுவே ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் அவை நோயின் மூல காரணத்தை அறிந்து அந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த தேவையான சிகிச்சை முறைகளை அளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  ஆயுர்வேத மருத்துவத்தில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பெரும்பாலும் பத்திய சாப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஆகியவற்றை செய்வதின் மூலமே நோய்களை குணப்படுத்த வழி செய்கிறது. ஆனால் இவற்றை குறிப்பிட்ட சில நாட்கள் வரை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் மட்டுமே இதன் முழு பலன் நமக்கு கிடைக்கும். ஒருவேளை குழந்தைகள் இந்த கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றி வந்தால் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இவை தவிர ஆயுர்வேத மருத்துவத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  பக்க விளைவுகள் : ஆயுர்வேத மருத்துவத்தில் அளிக்கப்படும் மருந்துகளின் டோஸ் அதிகமாகிவிட்டால் அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உண்டு. உதாரணத்திற்கு ஆயுர்வேத மருத்துவத்தின் பிரசித்தி பெற்ற மருந்துகளான திரிபலாவை அதிக அளவில் உட்கொள்ளும் போது அவை வயிற்றுப்போக்கை உண்டாக்க கூடும்.

  MORE
  GALLERIES

 • 77

  ஆயுர்வேத மருத்துவ முறை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா..? முழு விவரம் இதோ!

  மேலும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலிகைகளினாலும் சிலருக்கு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். சில மூலிகைகள் இளம் வயதினருக்கு கொடுக்கும்போது அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மருந்திலுள்ள பாஷாணம், ஈயம், பாதரசம் ஆகியவை அதிக அளவில் உட்கொண்டால் கண்டிப்பாக அவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்க கூடும்.

  MORE
  GALLERIES