ஆயுர்வேத மருத்துவ முறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று எந்த 2 நபர்களுக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து தேவைகள் இருக்காது மற்றும் எந்த இருவரும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை என்பதாகும். இதன் காரணமாக ஒன்-சைஸ்-ஃபிட்ஸ்-ஆல் ஆயுர்வேதிக் டயட் என்பது இல்லை. ஒரு நபருக்கு உகந்த உணவு என்பது ஆயுர்வேதத்தில் ஒரு நபரின் உடல் ஆரோக்கியம், வலிமை மற்றும் உடலின் தோற்றதை பொறுத்தது. சில நேரங்களில் நபர்களின் தோஷ வகை (வாதம், பித்தம், கபம்) அல்லது "மைண்ட்-பாடி டைப்" என்று குறிப்பிடப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி தோஷங்கள் என்பது மைண்ட்-பாடி ஃபோர்ஸஸ் ஆகும்.
ப்ராசஸ் செய்யப்படாத முழு உணவுகளை சாப்பிடுங்கள் : பிராணனை (prana) அதிகரிப்பது நமது உடலில் உயிர் சக்தியின் ஆதாரமான ஓஜஸை (ojas) உயர்த்த சிறந்த வழி என்று ஆயுர்வேத டயட் கூறுகிறது. prana அதிகம் நிறைந்த உணவுகள் பூமியில் இருந்து நேரடியாக கிடைக்கின்றன. இந்த உணவுகளில் prana நிறைந்திருக்க காரணம் சூரியன், நீர் மற்றும் பூமியின் ஆற்றல்கள். டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய முழு உணவுகளில் ஒன்று பாதாம். ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் வாதத்தை சமன் செய்யும் திறனுக்காக ஆயுர்வேதம் பாதாமை முக்கியமாக பரிந்துரைக்கிறது.
உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் போது, பாதாம் ஒரு புத்துணர்ச்சியூட்டி, டானிக் மற்றும் ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்து தயாரிப்பாக அறியப்படுகிறது. பிரமேஹா கண்டிஷன்களுக்கு (prameha conditions) பாதாம் மிகவும் சிறந்தது. உடல் பருமன், ப்ரீடயாபட்டிஸ், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ளிட்டவற்றை ஆயுர்வேதம் மருத்துவ கோளாறுகளாக வகைப்படுத்துகிறது. இவை ஒன்றாக பிரமேஹா நோய்க்குறியை உருவாக்குகின்றன. பலவீனம் மற்றும் நீரிழிவு போன்ற சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க பாதாம்களை உட்கொள்ளலாம்.
மதிய மற்றும் இரவு உணவுகள் : ஆயுர்வேதத்தின்படி சூரியன் வானத்தில் உச்சத்தில் இருக்கும் போது, நம்முடைய செரிமான நெருப்பும் அதாவது நண்பகலின் போது உச்சத்தில் இருக்கும். எனவே மதிய நேரங்களில் ஹெவியாக சாப்பிடாலும் கூட உணவுகள் சிரமமின்றி ஜீரணமாகும். எனவே மதிய நேரங்களில் தயக்கமின்றி சற்று ஹெவியாக சாப்பிடலாம். ஆனால் இரவு உணவு என்று வரும் போது மிதமான உணவுகளை எடுத்து கொள்ள ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. இரவில் தூங்க செல்வதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன் லைட்டான மற்றும் நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணுங்கள். இரவு 10 மணிக்கு அல்லது அதற்கு முன் தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அப்படி என்றால் இரவு உணவை குறைந்தபட்சம் 7.30-க்குள் முடித்து விடுவது நல்லது.
70 -30 ரூலை ஃபாலோ செய்யவும் : பிளேட்டில் வைக்கும் அனைத்தையும் வீணாக்காமல் சாப்பிட வேண்டும் என்று சொல்லி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால் ஆயுர்வேதத்தின்படி, ஒருவர் வயிறு நிறைந்து திருப்தி அடையும் வரை சாப்பிட்டால் போதுமானது. அதே போல 70 -30 ரூல் என்பது உங்களது உணவுகளின் போது வயிறு 70% நிரம்ப வேண்டும், 30% காலியாக இருக்க வேண்டும். எப்போது சாப்பிட்டாலும் 70-30 ரூலை பின்பற்ற வேண்டும்.