யோகா அல்லது உடற்பயிற்சிகளை தவிர்ப்பது : நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதில் யோகா மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் அமர்ந்துகொண்டால் கொரோனா வராது. நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது தவறான கணிப்பு. வீட்டில் இருந்தாலும் உங்கள் உடலை தொற்றுகளுடன் எதிர்த்து போராடும் பலத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்கு யோகா , உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
தூக்கத்தை தவிர்த்தல் : நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதற்கு நம்முடைய தூக்க முறையும் காரணமாகிறது. இரவு தூக்கம் சரியாக இல்லை எனில் உடல் வலிமை இழந்து சோர்வை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். எனவே எந்த வேலை இருந்தாலும் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழும் பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யுங்கள். இரவு தூக்கத்தை சமரசம் செய்யாதீர்கள்.