கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களை தாக்கும் நோயாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாதான் அதில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடு எட லான்சண்ட் குளோபல் ஹெல்த் கூறியுள்ளது. 2018 ஆண்டு ஆய்வுப்படி 97,000 புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களும் அதில் 60,000 பேர் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது. எனவே இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வும், கவனமும் அவசியம் என்று பரிந்துரைக்கிறது.
புகைப்படித்தலை தவிர்க்கவும் : புகைப்பிடித்தில் சுகாதாரக் கேடு. ஆனால் இதை எத்தனை பேர் தீவிரமாக நினைக்கின்றனர் என்பது தெரியாது. ஆனால் அது பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய்கான காரணமாகவும் இருக்கிறது. இது கருப்பையில் உள்ள அணுக்களை பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் உருவாகிறது. எனவே புகைப்பிடித்தலை தவிர்த்தல் நல்லது.
பாதுகாப்பான செக்ஸ் : சில ஆய்வுகளின் அடிப்படையில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது தகாத உடலுறவு மூலம் பரவுவது தெரியவந்துள்ளது. எனவே உடலுறவுகொள்ளும்போது பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுவது அவசியம். உடலுறவின் போது இரத்தம் கசிகிறது, தீவிர வலி உண்டாகிறது எனில் மருத்துவரை அணுகுங்கள். சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். இதுவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியே...