முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் என்று வரும்போது நோயாளிகள் தங்கள் டயட்டில் முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

  • 16

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    தட்பவெப்பநிலை அடிப்படையில் சீசன்கள் மாறும் போது நம்முடைய உடலின் சர்க்காடியன் ரிதமும் (circadian rhythm) மாற்றங்களை சந்திக்கிறது. கடும் குளிர் நிலவும் குளிர்கால மாதங்கள் பலரின் மூட்டு பிரச்சனைகள் மற்றும் எலும்பு அசௌகரியங்களுக்கு காரணமாகின்றன. இதில் பல பிரச்சனைகளுக்கு கடும் குளிரால் ஏற்படும் விறைப்புத்தன்மை (stiffness) காரணமாகும்.

    MORE
    GALLERIES

  • 26

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    எனவே குளிர் சீசனில் நாம் தகுந்த முன்னெச்சரிக்கைகளை எடுக்காவிட்டால் முடி, தோல், எலும்புகள் மற்றும் உங்கள் உடலின் பிற பகுதிகளில் குளிரின் தாக்கம் காரணமாக பிரச்சனை ஏற்படலாம். குளிர்காலத்தில் நம் எலும்புகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பிரபல உணவியல் நிபுணரும், ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா திவேதி, முக்கிய சில டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 36

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    தினசரி ஒர்கவுட்ஸ் & ஸ்ட்ரெச் செய்யவும் : நீங்கள் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டுகளை பெற விரும்பினால் வழக்கமான அடிப்படையில் தினசரி ஒர்கவுட்ஸ் செய்ய வேண்டும். இதனால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. தினமும் சுமார் 30 - 45 நிமிடங்கள் செய்யும் ஒர்கவுட்ஸ்கள் நம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் எலும்புகளை பலவீனமாக மற்றும் உடைய கூடியதாக மாற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) கண்டிஷன் ஏற்படுவதை தடுக்கவும் உதவுகிறது. ஒர்கவுட்ஸ் செய்வதால் உறுப்புகளுக்கு போதுமான ரத்த விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மூட்டுகளின் விறைப்புத்தன்மையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. தவிர தசைகளை வலுப்படுத்த மற்றும் எடையை பராமரித்து அதன் மூலம் எலும்புகள், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    தினசரி போதுமான வைட்டமின் டி-ஐ பெறுங்கள் : எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் என்று வரும்போது வைட்டமின் டி-ன் முக்கியத்துவத்தை நிச்சயம் குறைத்து மதிப்பிட முடியாது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி-ஐ பெறுவதற்கான சிறந்த வழி தினமும் சிறிது நேரம் வெயிலில் நடப்பது. ஏனெனில் வைட்டமின் டி-ஐ பெறுவதற்கான சிறந்த ஆதாரமாக சூரிய ஒளி இருக்கிறது. எனினும் நீண்ட நேரம் வெயிலில் வெளிப்படுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே தினசரி 10-20 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நம்மை வெளிப்படுத்தி கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுங்கள் : நீங்கள் தினமும் என்னதான் ஒர்கவுட்ஸ் செய்தாலும் ஆரோக்கியமான உடலை உறுதி செய்வதில் சீரான மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளுடன் கூடிய டயட் முக்கியப்பங்கு வகிக்கிறது. சீரான டயட் என்பது தேவையற்ற எடை அதிகரிப்பை தடுக்க உதவுவதோடு, நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. டயட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் மற்றும் பாதாம்களை சேர்ப்பது உடலின் மூட்டுகளை சுற்றி வலியை ஏற்படுத்தும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.

    MORE
    GALLERIES

  • 66

    குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் மூட்டு வலி பிரச்சனைகள்... தவிர்க்க உதவும் ஈஸி டிப்ஸ்!

    நோயாளிகள் தங்கள் டயட்டில் முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். எலும்பு மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் ஆரஞ்சு, ரெட் பெப்பர் மற்றும் தக்காளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கலாம். இவை மூட்டு வலி மற்றும் குருத்தெலும்பு இழப்பு உள்ளிட்ட சிக்கலை குறைக்கின்றன. தாவர அடிப்படையிலான கால்சியம் தயாரிப்புகளை டயட்டில் சேர்ப்பது எலும்புகளின் வடிவம் மற்றும் செயல்பாட்டைப் பாதுகாக்கும். அதே நேரம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகளை அளிக்கும்.

    MORE
    GALLERIES