முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை குறித்து தெரியாமல் இருப்பது, இந்த நோயை கண்டறியாமல் இருப்பது ஆகியவை மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 • 16

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  வயது முதிர்வுக்கு ஏற்ப சில உடல்நல பிரச்சினைகள் வருவது சகஜம் தான். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பலரையும் பாதிக்கக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. பெரும்பாலும் 50 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரக் கூடியதாகக் கருதப்பட்ட உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இப்போதெல்லாம் இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் : 22 முதல் 23 வயதுடைய நபர்களுக்கும் கூட உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை வரலாம் என்று தெரிவிக்கிறார் குர்ஹானைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரியங்கா ஷெராவத். ஆனால், இதற்கு ஹைப்பர்டென்சன் அல்லது இளம்வயது ஹைப்பர்டென்சன் என்று பெயர் என்று அவர் குறிப்பிடுகிறார். சிறுநீரக பிரச்சினைகள், ரெனல் ஆர்டரி ஹைப்பர்டென்சன் போன்ற பல காரணங்களால் இத்தகைய பிரச்சினை வருமாம்.

  MORE
  GALLERIES

 • 36

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  காரணங்கள் மாறுபடுகின்றன  : இளம் வயதில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்குமான காரணங்கள் வெவ்வேறானவை என்று மருத்துவர் பிரியங்கா கூறுகிறார். ஹைப்பர் தைராய்டிஸம் காரணமாக இளம் வயதில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்றும், உடலின் முக்கிய ரத்தக் குழாய்கள் சுருங்குவதாலும் இந்தப் பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

  MORE
  GALLERIES

 • 46

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  கவலைக்குரிய விஷயம்  : 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர்களில் 8இல் ஒருவர் ஹைப்பர்டென்சன் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர் என்று கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இளம் வயதில் இந்த பிரச்சினை ஏற்படும்போது கடுமையான விளைவுகள் உண்டாகுமாம். குறிப்பாக இதயம் மற்றும் மூளையின் நலன் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  அறியாமையால் கடும் பாதிப்பு  : உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை குறித்து தெரியாமல் இருப்பது, இந்த நோயை கண்டறியாமல் இருப்பது ஆகியவை மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, அறிகுறிகளை உணர்ந்தாலும் சிலர் மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பதில்லை. ஆனால், இளம் வயதிலும் கூட ரத்த அழுத்தத்தை வாடிக்கையாக பரிசோதிக்க வேண்டும். வீட்டிலேயே ரத்த அழுத்தம் கண்டறிவதற்கான கருவியை வைத்துக் கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  இளம் வயதில் BP பிரச்சினையால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்..? கண்டிப்பா இதை படிங்க..

  பிரச்சினையை தவிர்க்க  : ஆரோக்கியமான வாழ்வியல் பழக்க வழக்கங்கள் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம். சத்தான உணவுகளை சாப்பிடுவது, சோடியம் நிறைந்த உணவுகளை குறைப்பது, உடல் எடையை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையை தவிர்க்கலாம். வாரம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களுக்கு குறையாமல் பயிற்சி செய்ய வேண்டும். தினசரி சேர்க்கப்படும் உப்பின் அளவு 1,500 மிகி அளவை தாண்டக் கூடாது. மேலும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES