நமது வாழ்வியல் முறையில் மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே உடலுக்கு ஏராளமான பாதிப்புகள் வர தொடங்கிவிட்டன. அதில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உடல் பருமனால் உண்டாகும் பிரச்சனைகளை எடுத்து கொள்ளலாம். தவறான உணவு பழக்கம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் எடை விரைவிலேயே கூடிவிடும். எடை கூடிய பின் தினமும் உடற்பயிற்சிகளை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விடுவோம்.
எப்படி உதவும்? அதிக நல்ல கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். இதனால் அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு குறைந்து விடும். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இடையில் சாப்பிட கூடிய தேவையற்ற உணவுகள் தான் எடையை குறைக்க விடாமல் தடுக்கும். இந்த நிலை பாதாம் சாப்பிடுவதால் மாறும்.
எப்படி சாப்பிடுவது? பாதாம் மற்றும் வால்நட்டை வறுத்து சாப்பிட கூடாது. அவ்வாறு செய்வதால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து விடும். பாதாமை நீரில் ஊற வைத்து தோலை நீக்கிய பின் சாப்பிட வேண்டும். தினமும் 6-7 பாதாம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதே போன்று 2 முழு வால்நட்டை தினமும் எடுத்து கொள்ளலாம். இந்த அளவை விடவும் அதிகமாக இவற்றை சாப்பிட்டால் உடல் உபாதைகள் உண்டாகும்.